தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம், விபத்தா, வெளிநாட்டு சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் கூறியதாவது:ரஷ்ய தயாரிப்பான மி-17 வி5 ரக ஹெலிகாப்டர், சமகாலத்திய அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது.இவ்வகை ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி விபத்துக்குள்ளானதில்லை.
இதை எல்லாம் மீறி ஒரு விபத்து நடந்துள்ளது என்றால், அது இயற்கையாலா அல்லது மனித இயல்புக்கு மீறி நடந்ததா அல்லது வெளிநாட்டு சதியா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இது, மிகவும் துரதிர்ஷ்டமான விபத்து. நாட்டின் மிக உயர் பாதுகாப்பு பதவியில் இருக்கும் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சக ராணுவ அதிகாரிகளுடன் டில்லியில் இருந்து, நீலகிரி மாவட்டம், வெலிங்டனிலுள்ள ராணுவ கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்கிறார்.
அதற்காக டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்குகிறார். சூலுார் விமானப்படை தளத்தில் அதிகாரிகளை சந்தித்துவிட்டு, தன் மனைவி மற்றும் சக அதிகாரிகள் என, 14 பேருடன், மி - 17 வி5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி செல்கிறார்; இந்த ெஹலிகாப்டரில் 36 பேர் வரை பயணிக்கலாம்.மொத்தம் 15 நிமிட துார பயணம் அது. ஆனால், தரை இறங்குவதற்கு 5 நிமிடம் முன் ெஹலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புகுழுவினர் சடலங்களை மீட்டதோடு, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராணுவ உயர் அதிகாரிகள் போகும்போது, அவர்களுக்குண்டான விமானம், ெஹலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது. இந்த மி--17 வி5 ரக ஹெலிகாப்டர், உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகளவு வெள்ளம் வந்தபோது மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டது.
தவிர, இந்தியாவில் உள்ள பல மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல ராணுவ உயர் அதிகாரிகள், முக்கிய அமைச்சர்கள் அலுவலக ரீதியாக இந்த விமானத்தில் தான் பயணிப்பர்.
இந்த விமானம் சமகால அதிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது. பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இயந்திரக்கோளாறு என்பது எந்தவொரு இயந்திரத்திற்கும் வரலாம்.தவிர இடி மின்னல் தாக்குதல் காரணமாகவும், குறைந்த உயரத்தில் பறக்கும்போது பனி மூட்டம் காரணமாக மரத்தின் மீது தவறுதலாக மோதியும் விபத்துகளில் சிக்கவும் வாய்ப்பு உண்டு. சதிச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்
பதற்கில்லை.விபத்தில் உயிரிழந்த முப்படைத்தளபதி பிபின் ராவத் கையில் எடுத்துள்ள சில வேலைகளை எல்லாம் பார்க்கும்போது, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில், வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாகவும் இது இருக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விசாரணையை ஏற்கனவே விமானப்படையினர் துவங்கி விட்டனர்.
நாட்டின் மிக முக்கியமான அதிகாரி என்பதால், பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியினர் கூடி ஆலோசனை நடத்துவர். இந்த விபத்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது.
ஏனெனில் ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் அதிகபட்ச தொழில்நுட்பம் கொண்டது.
இந்த ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது. மேலும், மூன்று விமானிகள் அதில் இருப்பர். இதெல்லாம் மீறி ஒரு விபத்து நடந்துள்ளது என்றால் அது இயற்கையாலா அல்லது மனித இயல்புக்கு மீறி நடந்ததா அல்லது வெளிநாட்டு சதியா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் அதிகபட்ச வீடியோக்களை பரப்புவது, மக்களை ஒரு பயத்திற்கு கொண்டு வந்து விடும். அந்த பயம் தேவையற்றது. இவ்வாறு மதன்குமார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் தப்பிய வருண் சிங்
குரூப் கேப்டன் வருண் சிங், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.வருண் சிங்குக்கு, 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடநத ஆண்டு, தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆக.,ல் அவருக்கு 'ஷௌரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.