ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்கொலை ஜெர்மனியை உலுக்கிய சம்பவம்!
06 Dec,2021
ஜெர்மனியில் உள்ள Koenigs Wusterhausen என்ற நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டுக்குள் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் அனைவரும் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் 4, 8 மற்றும் 10 வயது உடையவர்கள் என்பதும், 40 வயதுடைய பெரியவர்கள் இரண்டு பேர் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே ஜெர்மன் ஊடகங்கள் கொலை செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் வீட்டில் இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.