விமானத்தை தள்ளிச் சென்ற பயணிகள் – வைரலாகும் வீடியோ
06 Dec,2021
விமானமொன்றை அதில் பயணித்த பயணிகள் இறங்கி வந்து தள்ளிச் சென்ற விநோத சம்பவமொன்று நேபாளத்தில் இடம் பெற்றுள்ளது.நேபாளத்தில் உள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு தள்ளிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த விமானம் தரையிறங்கிய போது திடீரென அவ் விமானத்தின் பின்புற டயர் ஒன்று வெடித்துள்ளது.
இதனால் விமானமானது அவ்விடத்தை விட்டு நகர முடியாமல் ஓடுதளத்திலேயே நின்றுவிட்டது.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்த விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒன்றாக இணைந்து அவ்விமானத்தை தள்ளிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வெளியான வீடியோவானது தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.