இந்த பாம்பின் தலையை வெட்டினாலும் வெட்டியவரை கடித்து கொன்று விடுமாம். என்ன பாம்பு இது?
06 Dec,2021
ராஜநாகம் குறித்த யாருக்கும் தெரியாத பல ரகசியங்கள் கொண்ட தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
இந்த உலகில் ஒவ்வொரு மனிதரும் பயப்படும் ஒரு ஜீவராசி என்றால் அது பாம்புதான். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என சொல்வார்கள் எவ்வளவு வீரனாக இருந்தாலும் பாம்பு தாக்கினால் அதிலிருந்து எல்லாம் மீண்டு வர முடியாது. இந்த உலகில் பாம்பு கடியால் ஏற்படும் மரணங்கள் அதிகம். உலகம் முழுவதும் இந்த பாம்புகள் உள்ளன. இந்த பாம்புகளின் ராஜாவாக ராஜ நாகத்தை பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்
ராஜநாகம்
ராஜநாகம் இந்த பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதை போல பாம்பும் பார்க்க கம்பீரமாக இருக்கும். கம்பீரம் மட்டுமல்ல மிக கொடிய விஷதன்மையும் இந் பாம்பிடம் இருக்கிறது. இந்த பாம்பு கடித்தால் அடுத்த 30 நிமிடங்களில் கடிபட்டவர் உயிர் அவரிடம் இருக்காது. இந்தியாவில் பாம்பு கடியால் மரணமடைபவர்கள் பெரும்பாலும் கோப்ரா ரக பாம்பு கடித்ததால்தான் மரணமடைகிறார்கள்.
இந்த கோப்ரா ரக பாம்புகள் ஒன்று முதல் 1.5 மீட்டர் நீளம் இருகு்கும். இதில் மொத்தம் 300 ரக பாம்புகள் உள்ளன. அத்தனை 300 ரக பாம்புகளும் விஷம் கொண்டது. நேரடியாக மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியது. இந்த பாதிப்பு மனிதர்களின் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயலை நிறுத்தை உயிரிழக்க செய்யும்.
பாம்பு விஷயத்தில் Cardiotoxin மற்றும் synoptic neurotoxins ஆகிய 2 விஷ திரவங்கள் இருக்கின்றனர். இது மனிதர்களின உடலுக்குள் சென்றதும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதனால் முதலில் கடிபட்ட இடம் துவங்கி உடலில்ஒவ்வொரு பாகமாக செயல்இழக்க வைக்கும். பார்வை இழுப்பு ஏற்படும். பார்வை இழுந்துவிட்டால் அடுத்தாக உயிரை பறிக்கும்
வெட்டினாலும் கடிக்கும்
இந்த கோப்ரா ரக பாம்பில் ஆச்சரியமான விஷயம் என்னெவன்றால் இந்த பாம்பின் தலையை துண்டாக வெட்டினாலும், பாம்பு துடிதுடித்துக்கொண்டே இருக்கும். வெட்டப்பட்ட தலை மனிதரை கடித்தாலும் கடிபட்டவர் உடலில் விஷம் ஏறிவிடும். இப்படியாக சீனாவில் செஃப் ஒருவர் பாம்பு சூப் வைக்க பாம்பை வெட்டியுள்ளார். வெட்டுப்பட்ட தலை அவரை கடிக்க அவர் உயிரிழந்துவிட்டார்.
இரு வகை பாம்பு கடி
பாம்பு கடியில் இரு வகையான பாம்பு கடி ஒன்று இருக்கிறது. ஓன்று சாதாரண பாம்பு கடி, மற்றொன்று விஷ பாம்பு கடி, விஷ பாம்புகடியில் பாம்பு கடிக்கும் போது விஷ உடலுக்குள் விஷத்தை கக்கிவிடும். சாதாரண பாம்புகடியில் வெறும் கடி மட்டுமே இருக்கும் உடலுக்குள் விஷயம் இறங்காது. ஆனால் எந்த வகையான பாம்பு கடியாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பவில்லை என்றால் மரணம் தான்.
அமெரிக்கா முதலிடம்
இந்தியாவில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உலக அளவில் பாம்பு கடியால் சம்பவங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம், ஆனால் அமெரிக்காவில் பாம்பு கடிக்கு உடனடி சிகிச்சைக்கு பல வசதிகள் வந்துவிட்டதால் அதில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவு தான். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி ஆண்டுதோறும் மொத்தம்50 லட்சம் பேருக்கு பாம்பு கடி ஏற்பட்டும் அதில் 1 லட்சம் பேர் மரணமடைகிறார்கள்.