ஒமைக்ரான்’ 23 நாடுகளில் பரவியது: மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு
01 Dec,2021
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமைக்ரான்’ கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியதாவது:- ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்தது 23 நாடுகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். என்று கூறினார்.