எந்த இரத்த வகையை சேர்ந்தவர்களை கொரோனா இலகுவில் தொற்றும்? வெளியான ஆய்வு முடிவு
01 Dec,2021
டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை இரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், AB மற்றும் B இரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி முதல் ஒக்டோபர் 4ம் திகதிவரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது.
இந்த ஆய்வில், B இரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் அதே இரத்தக் குழுவைக் கொண்ட பெண் நோயாளிகளைக் காட்டிலும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் AB இரத்த பிரிவை உடைய 60 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.