இந்துக்கள் இடும் நாமம் எதைக் குறிக்கிறது தெரியுமா? .. டாக்டர் ஷாலினி

30 Nov,2021
 

 
 
ஆனால் நமது கலாச்சாரத்தில் நாம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்கிறோம், எந்த ஒரு ஜீவராசியாக இருந்தாலும் தாயினுடைய யோனி வழியாக தான் பிறக்கிறது. அதனால்தான் இன்னும் சில மதங்களில் குறிப்பாக சொல்லப்போனால் ஐயங்கார்கள் போட்டுள்ள நாமம் பெண்ணின் யோனியை குறிக்கிற சின்னம்தான், 
 
சிவனின் நெற்றியில் மூன்றாவது கண் என்பது ஆண்குறியின் சின்னம்தான் என்றும், அதேபோல் பெருமாள் நெற்றியில் வரைந்திருக்க நாமம் பெண்குறியின் சின்னம் என்றும் மருத்துவர் ஷாலினி கருத்து கூறியுள்ளார். பெண்ணுறுப்பில் இருந்து மட்டுமே பிள்ளை பிறக்காது ஆண்களின் நெற்றியில் இருந்தும் தொடையில் இருந்தும் பிள்ளை பெற்றெடுக்க முடியும் என்று காட்டுவதற்காக இப்படி குறியீடுகள் வைக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 
சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறதோ அதே அளவுக்கு அது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னி கலசத்தை அந்தப் படத்தில் தவறாக பயன்படுத்திவிட்டனர் என்ற குற்றச்சாட்டே ஆகும். ஒருபுறம் அந்த குறிப்பிட்ட காட்சி வன்னியர்களை காயப்படுத்திவிட்டது, அதுக்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவாதம் இருந்தாலும், மறுபுறம்  அக்னி சட்டியில்  இருந்து தாங்கள் பிறந்ததாக அவர்கள் கூறி வரும் கருத்தே விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து மனநல மருத்துவர் ஷாலினி புராணங்களையும் அதில் பிறப்புகளையும் மேற்கோள்காட்டி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொன்றை புனிதமாக பார்க்கிறது.. அதை எவரும் கேள்வி எழுப்ப முடியாது. பொதுப்படையாக நமது ஊர்களில் ஆண்கள் மூலமாக குழந்தை பிறந்தது என்ற பல கதைகளும் உண்டு.
 
The mark on the forehead is a symbol of the genitals" .. Dr. Shalini Terrible Interpretation.
 
அது சில புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் நமக்கு இருக்கிற சங்கடம் என்னவென்றால், பலருக்கு புராணம் என்றால் என்ன? வரலாறு என்றால் என்ன? என்பதற்கான வித்தியாசம் தெரியாததே ஆகும். புராணத்தில் ஒன்று சொல்லப்பட்டால் அது நிஜமாக நடந்ததாகவும், அதுதான் வரலாறு என்றும், அதை தூக்கி வைத்து பேசும் மனநிலை இங்கு உள்ளது. புராணம் என்பது முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான், ஆதாரத்தோடு இருந்தால்தான் அது வரலாறு, ஆதாரம் இல்லாத ஒன்று புராணம், அப்படித்தான் சிவ புராணம், கந்த புராணம் போன்ற பல புராணங்கள் உள்ளது. அதில்,  சிவனுடைய நெற்றியிலிருந்து வெளியேறிய  தீப்பொறி அக்னிபகவான் வாங்கி அதைத் தண்ணீரில் போடும்போது அது குழந்தையாக உருவானது என்றும் அதுதான் முருகன் என்றும் சொல்லுகிறார்கள்.
 
அதேபோல சிவனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் மன்மதன் வந்தான், சிவனுக்கு மோகம் வந்தது அப்போது சிவனின் மூன்றாவது கண் திறந்தது என்று கூறுவார்கள். மூன்றாவது கண் என்று சொல்வத  ஆண்குறியைத்தான். அதற்கும் கண்ணைப் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. உண்மையிலேயே அந்த கண் என்பது நெற்றியில் இல்லை. கண் நெற்றியில் இருக்கிறது என்று சொல்லப்பட்டதால் சிவனின் நெற்றியில் அது ஒரு கண்போல வரையப்பட்டுள்ளது.
 
ஆனால் இதில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஒரு ஆணின் விந்துவில் இருந்து மட்டும் குழந்தை உருவாகாது. இதற்கு ஒரு பெண்ணின் கர்பப்பை கருமுட்டை தேவை. அப்படி என்றால் இந்த புராணங்கள் எல்லாமே பெண்ணின் கர்பப்பை மற்றும் கருத்தரிப்புக்கு பிறப்புக்கு எதிராக உள்ளது. இந்திய புராணங்கள் மட்டும் இப்படி அல்ல, கிரேக்கப் புராணங்களிலும் இதுபோன்ற கதைகள் உண்டு. கிரேக்கர்களின் தலைமை  கடவுள் ஜீயஸ், அவரின் தொடையிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது அந்தக் குழந்தைதான் டயனசஸ்,  அவன்தான் போதைகளுக்கெல்லாம் ராஜா என்றும் சொல்லப்படுகிறது. 
 
இதுபோல பல கதைகள் உண்டு. ஒரு பெண்ணால் குழந்தை பிறக்கிறது என்பதை மறைப்பதற்காகவே, மறுப்பதற்காகவே சில சடங்குகள் செய்யப்படுகிறது. அதேபோல பிராமணர்கள் மற்றும் தமிழ் சமணர்கள் பூணூல் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது பெண்ணிடமிருந்து பிறந்த குழந்தை தீட்டு என்றும், அந்தச் தீட்டை கழிப்பதற்காக பூணூல் போடுவதாகவும் கூறுகின்றனர். குழந்தை பிறந்து விட்டதே என அதை கொண்டாட மாட்டார்கள், தீட்டு என்றுதான் சொல்வார்கள், பிறகு அந்த தீட்டை கழித்துதான்  கோவிலுக்கு கொண்டு வருவார்கள். ஒரு குழந்தை பிறப்பையே தீட்டு என்று சொல்லுகிற வழக்கம் உண்டு என்றால் இந்த கலாச்சாரத்தில் ஒரு பிறப்பு எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யோசிக்க வேண்டும். அனைத்துமே பெண்ணின் உடலிலிருந்து குழந்தை வரவில்லை என்பதை  மறுதளிப்பதற்கான ஒரு உத்திதான். சூரியனில் இருந்து வந்தோம், சிவனுடைய நெற்றியில் இருந்து வந்தோம் என்று கூறுவதெல்லாம் இந்த அடிப்படையில்தான், கர்ணன் சூரிய பகவானுக்கு பிறந்தவன் என்று சொல்லப்படுகிறது, இதே போல எகிப்திலும் ஒரு கட்டுக் கதை உள்ளது.
 
இப்படி சொல்ல வேண்டியதன் நோக்கம், அவசியம் என்னவென்றால், 2 அணிகளுக்கு இடையே போர் நடக்கும் போது, தன் எதிரில் உள்ளவரை விட தான் உயர்ந்தவன் என்ற மனநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்,  தான் வேறு எதிரில் இருப்பவன் வேறு என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான், அவனைப்போல தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் அல்ல, நான் சூரியனிலிருந்து பிறந்தவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று போதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல சாமானியமாக பெண்ணின் யோனியிலிருந்து பிறக்கவில்லை, நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவே இப்படி போதிக்கப்பட்டு இருக்கிறது. நேராக சூரியனிலிருந்து வந்தாய், குண்டத்தில் இருந்து வந்தாய், அக்னி சட்டியில் இருந்து வந்தாய் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. மனித பிறப்பு என்பதை மறைத்து தாங்கள் ஆன்மீகரீதியாக, தேவத்துவமாகவும் பிறந்தவர்கள் என்பதற்காக இப்படி போதிக்கப்பட்டுள்ளது.
 
The mark on the forehead is a symbol of the genitals" .. Dr. Shalini Terrible Interpretation.
 
ஆனால் நமது கலாச்சாரத்தில் நாம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்கிறோம், எந்த ஒரு ஜீவராசியாக இருந்தாலும் தாயினுடைய யோனி வழியாக தான் பிறக்கிறது. அதனால்தான் இன்னும் சில மதங்களில் குறிப்பாக சொல்லப்போனால் ஐயங்கார்கள் போட்டுள்ள நாமம் பெண்ணின் யோனியை குறிக்கிற சின்னம்தான், பெருமாளே அதை தான் தன் நெற்றியில் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆக பெண் வழிபாடு என்பது பூர்வீகமாக இருந்தது. பெண் இல்லை என்றால் உயிர் இல்லை என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் ஆணாதிக்கத்தின் நப்பாசை பெண்கள் மட்டும்தான் பிள்ளை பெற்றெடுப்பார்களா? நாங்களும் தான் பிள்ளையை பெற்றெடுப்போம். நாங்கள் நெற்றியில் இருந்து பெற்றெடுப்போம், தொடையிலிருந்து பெற்றிருப்போம் என்பதை காட்டுவதற்காக தங்கள் நப்பாசையை வெளிப்படுத்துவதற்காக இப்படி குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
 
அதேபோல கிறித்தவ மதத்திலும் உடலுறவு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று சொல்வதும், அதை பாவமற்ற குழந்தை என்று சொல்வதும், தேவகுமாரன் என்று சொல்வதும், பெண்ணை அசிங்கப் படுத்துகின்ற வேலை. மொத்தத்தில் ச*** என்பது அசிங்கம் என்பதை கற்பிதம் செய்வதற்காக இப்படி பேசப்பட்டுள்ளது. பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது என்பது இயற்கையின் நீதி ஆனால் ஆண் சமூகம் பெண்களை அசிங்கப் படுத்திக் கொண்டே இருப்பதன் வெளிப்பாடுதான் இது என்று அவர் கூறியுள்ளார்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies