பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான 'மம்மி'!
28 Nov,2021
தென் அமெரிக்க நாடான பெருவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மியைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சான் மார்கோஸ் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான் டேலன் லூனா (Van Dalen Luna) கூறுகையில், "மம்மியின் முக்கிய குணாதிசயம் என்னவென்றால், முழு உடலும் கயிறுகளால் கட்டப்பட்டு, கைகளால் முகத்தை மூடியபடி, உள்ளூர் இறுதிச் சடங்கு முறையில் இருக்கிறது" என்று கூறினார்.
அந்த எச்சங்கள் உயரமான ஆண்டியன் பகுதியில் வாழ்ந்த ஒருவருடையது என்று லூனா மேலும் தெரிவித்தார்.
இது எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க ரேடியோகார்பன் டேட்டிங் முறையில் சோதனை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மம்மியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க நாட்டின் கடற்கரைக்கும் மலைகளுக்கும் இடையே வளர்ந்த கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவரின் எச்சங்கள் என்று கூறப்படுகிறது.
Lima நகரின் புறநகரில் காணப்படும் நிலத்தடி அமைப்பினுள் இது கண்டுபிடிக்கப்பட்டது. மம்மியின் பாலினம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதே இடத்தில், கல்லறை மட்பாண்டங்கள், காய்கறி எச்சங்கள் மற்றும் கல் கருவிகள் போன்றவை கிடைத்துள்ளன.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட 29 மனித உடல்களை வடமேற்கு பெருவின் Lambayeque பகுதியில் உள்ள ஒரு தளத்தில் கண்டுபிடித்தனர்.