பல பேரால் 17 வயதான பெண்ணுக்கு நடந்த கொடுமை
27 Nov,2021
புதுச்சேரியில் கடந்த செவ்வாய்கிழமை, 150 பார்லர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது அங்கிருந்த ஒரு ஸ்பாவிலிருந்து ஒரு 17 வயதான பெண்ணை மீட்டனர் .அவரிடம் போலீசார் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது .அந்த சிறுமியின் கூற்றுப்படி, தன்னை ஸ்பாவில் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார் .இந்த விபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் மொத்தம் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த குற்றவாளிகள் அந்த 17 வயது மைனர் பெண்ணை ஸ்பா ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலூரில் வசிக்கும் மருந்து விற்கும் 30 வயதான பி ஸ்ரீராம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த 47 வயதான மளிகை கடை காரரான எம் சாதிக் பாஷா என்று போலீசார் கூறினர்
மேலும் இந்த விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில், அவரை பலான தொழில் செய்ய வற்புறுத்திய ஸ்பா உரிமையாளர் 56 வயதான சுனிதா என்பவரும் கைது செய்யப்பட்டார்.