உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் தினமும் ஒரு பிடி உலர் திராட்சை போதும்.
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாமிரம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன.
நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும். உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.
இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுவதற்கு வழிவகுக்கும்.
உடலில் உணவு செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.
உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவுகிறது.
உங்களின் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.
மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கும் உலர் திராட்சை உதவுகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சைப் பழம் உதவுகிறது.
மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அந்த நோயில் இருந்து விடுபட உதவும்.
கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மிகவும் உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை உலர் திராட்சையை சாப்பிட்டால் சரி ஆகும்.
உங்களது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.
உலர் திராட்சை சாப்பிடுவது உடல் சூட்டை தனிக்கவும் உதவும்.
ப்பொழுதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சிறிது உலர்ந்த திராட்சையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.