ஒரு கணவனுக்கு வீட்டுக்குளே நடந்த விபரீதம்
13 Oct,2021
தனது தம்பியின் உதவியோடு தன்னுடைய கணவரை கொன்ற மனைவியையும் அவரின் தம்பியையும் போலீஸ் கைது செய்தது .
மும்பை அருகே தானே பிவாண்டியில் கல்ஹர் பகுதியில் 38 வயதான சஞ்சய் பாகி தனது 35 வயதான சவிதா சஞ்சய் பாகியுடன் வசித்து வந்தார் . அந்த வீட்டிற்கு சவிதாவின் சகோதரர் 32 வயதான அக்ஷய் கலங் அடிக்கடி வந்து போவார் .இந்நிலையில் ஒரு சொந்தமாக தொழில் செய்து வரும் சஞ்சய் அந்த மனைவியோடு அடிக்கடி சண்டை போட்டு தகராறு செய்து வந்தார் .அதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை வரும்போதெல்லாம் அந்த சஞ்சய் தன்னுடைய மனைவியை அடிப்பது வழக்கம் .
இதை அந்த பெண் சவிதா தன்னுடைய வீட்டிற்கு வரும் தன்னுடைய தம்பி அக்ஷையிடம் கூறினார் .அதனால் அவர் எப்படியாவது தன்னுடைய சகோதரியினை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார் .
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அந்த கணவர் சஞ்சய் நன்றாக குடித்து விட்டு வந்தார் .பின்னர் வழக்கம் போல மனைவியிடம் சண்டை போட்டு அவரை அடித்தார் .அப்போது அங்கிருந்த அவரின் தம்பி தன்னுடைய சகோதரியை காப்பாற்ற எண்ணி அங்கு வந்து தன்னுடைய மாமாவை பிடித்து தாக்கினார் .அப்போது அவரை அந்த சகோதரி பிடித்துக்கொண்டார் .பின்னர் இருவரும் தாக்கியதில் அந்த கணவர் சஞ்சய் அங்கேயே இறந்தார் .பிறகு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கூறினர் .போலீசார் அந்த சஞ்சயை அடித்துக் கொன்ற அக்காவையும் அவரின் தம்பியையும் கைது செய்தனர்