இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியம் கிடையாது என்ற அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020ல் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஊதியம் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் சாலைகளில் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் தடுப்பூசி பெறாத சிலருக்கு மட்டும் கொரோனா விதிகளிலிருந்து விலக்களிக்கும் வகையில் பெர்லின் செனேட் வாக்களித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10ஆம் திகதி) முதல், மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி பெற இயலாதவர்களுக்கு, தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படும் இடங்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட உள்ளது.
ஜேர்மனியின் பெரும்பாலான மாகாணங்களைப் போலவே, பெர்லினிலும் உணவகங்கள், மதுபான விடுதிகள், திரையரங்குகள் முதலான இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி என்னும் விதி கடைப்பிடிக்கப்படுகிறது..
ஆனால், இந்த விதிவிலக்கு அமுலுக்கு வருவதைத் தொடர்ந்து, தடுப்பூசி பெற இயலாதவர்கள், அதாவது குழந்தைகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் முதலானோர் இந்த விதியால் பாதிக்கப்படமாட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை முதல், மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி பெற இயலாதவர்கள், தங்கள் மருத்துவரிடமிருந்து, தங்களால் தடுப்பூசி பெற இயலாது என்பதற்கான ஆதாரமாக கடிதம் ஒன்றை தங்களுடன் வைத்திருக்கவேண்டும்.
அத்துடன், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்தையும் வைத்திருந்தால், அவர்கள் கட்டுப்பாடுகள் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகள், திரையரங்குகள் முதலான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.