பிரித்தானியாவையே நேற்று உலுப்பியுள்ள, 4 கொலைச்
21 Sep,2021
பிரித்தானியாவையே நேற்று உலுப்பியுள்ள, 4 கொலைச் சம்பவம் இதுதான். செபீல்ட் நகரில் நேற்றைய தினம் ஒரு வீட்டில் இருந்து 4 பேரது உடலை பொலிசார் மீட்டார்கள். தாய்(35) அவரது மகன்(13) மகள்(11) அத்தோடு அன்றைய தினம் இரவு தங்க எனச் சென்ற 11 வயது நண்பியும் பிணமாக கிடந்துள்ளார்கள். இதனை அடுத்து பெரும் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், தாயின் காதலன் டாமியன் பென்டால்(31) என்ற இளைஞரை அதிரடியாக கைது செய்யுள்ளார்கள். இவரே இந்த 4 கொலைகளையும் செய்து விட்டு தப்பிக்க முனைந்ததாக பொலிசார் நம்புகிறார்கள்.
இதில் தனது உற்ற நண்பி வீட்டுக்கு உறங்கச் சென்ற 11 வயதுச் சிறுமியும் கொல்லப்பட்டது, மிகவும் கவலையான விடையம். அவரது அப்பா கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது. ஏன் என் மகளை அங்கே படுக்க அனுமதித்தேன் என்று வாழ்கை முழுவதும், என்னை கவலைப்பட வைத்து விட்டாள் என்று அவர் கூறி, தேம்பி தேம்பி அழுகிறார். இதில் இருந்து நாம் ஒரு விடையத்தை கற்றுக் கொள்ளவேண்டி உள்ளது. அடிக்கடி எமது அப்பா அம்மா, உங்கள் நண்பர்களை, கவனமாக தெரிவு செய்யுங்கள். அவர்கள் நல்ல குடும்பமா என்று பாருங்கள் என்று கூறுவது இதற்காக தான். குறித்த தாய் கணவைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில். காதலன் ஒருவரையும் வைத்திருந்துள்ளார். அதிலும்ஸ
தன்னை விட 4 வயது இளமையான இளைஞர் ஒருவரை காதலனாக வைத்திருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.