சிக்கன் நூடுல்ஸ் சூப்
18 Sep,2021
நூடுல்ஸ் - 100 கிராம்
சிக்கன் - 300 கிராம்
கேரட் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு பொடி - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் - 3
பூண்டு - 5 பற்கள்
செய்முறை
சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, கேரட், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் எலும்புகள் கொண்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் இல்லாத சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குக்கரை மூடி 15 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.
பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் விட்டு எடுத்து வைத்துள்ள எலும்புகள் இல்லா சிக்கினை அதில் போடவும். சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதில் மிளகு பொடி சேர்த்துக் கொண்டு 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
சிக்கனின் உள்ள நீர் வற்றியதும் நூடுல்ஸை சேர்த்து அதோடு குக்கரின் வேக வைத்த நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வேக விடுங்கள். அளவுக்கு அதிகமாகவும் நூடுல்ஸ் வேகக் கூடாது. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
கெட்டியான பதம் வரும்போது வேகவைத்த காய்கறிகள் மற்றும் எலும்பு சிக்கனை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறுங்கள்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்