நெதர்லாந்தில் மர்ம நபர் வெறிச்செயல்: இருவர் பலி!
17 Sep,2021
ஐரோப்பியா நாடான நெதர்லாந்தில் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை Almelo நகரில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, Almelo நகரின் M.th. Steynstraat-ல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும், காயமடைந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நபர் ஒருவர் வீட்டின் பால்கனியிலிருந்து குறுக்கு வில்லில் சுடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், வீட்டிற்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டடுள்ளதாகவும், சம்பவயிடத்தில் கைது நடவடிக்கையின் போது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் M.th. Steynstraat-க்கு விரைந்ததாகவும், அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக Overijssel காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காலை முதல் பரபரப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.
எனினும், சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பால்கனியிலிருந்து குறுக்கு வில்லில் சுட்டு நபர் தான் கத்துக்குத்து ஈடுபட்டாரா என்பது தொடர்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.