ஆட்டோ ட்ரைவர்களால் 20 வயது பெண்ணுக்கு நடந்த கொடுமை
20 Aug,2021
தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு 20 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார், அவர் கடந்த புதன்கிழமை இரவு அங்குள்ள சந்தோஷ்நகரிலிருந்து ஆட்டோவில் போக ஒரு ஆட்டோவை கூப்பிட்டார் .அந்த ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்ணை பார்த்ததும் நிறுத்தி அந்த ஆட்டோவில் கூட்டி சென்றார்.
அப்போது அந்த ஆட்டோவில் இரவு நேரத்தில் போகும்போதே, அந்த ஆட்டோ ஓட்டுநர் மேலும் சில ஆட்டோ ஓட்டுனர்களை போன் செய்து ஒரு இடத்திற்கு வர சொன்னார். பின்னர் அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் அந்த ஆட்டோ ட்ரைவர் அந்த ஆட்டோவை ஒரு இருட்டான பகுதியில் நிறுத்தினார். அந்த பெண் எதனால் இப்படி பாதி வழியில் ஆட்டோவை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டார் .அதற்கு அவர் ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது அதை சரி செய்கிறேன் என்று கூறி இறங்கினார்.
அதற்குள் அங்கு கூடிய மேலும் சில ஆட்டோ ட்ரைவர்கள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து அந்த ஆட்டோவிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டாக செய்த பலாத்காரத்தை புகாராக கூறினார். போலீசார் வழக்கு பதிந்து அந்தக் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பின்னர் மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைக்காக பரோசா மையத்திற்கு அனுப்பப்பட்டார். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளையும் மீட்டெடுத்து ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.