55 வயது பெண்ணை கொன்ற 70 வயது முதியவர்.. ?
06 Aug,2021
..
70 வயது தாத்தாவுக்கு 55 வயது பழனியம்மாளுடன் கள்ளக்காதல்.. அத்துடன் சந்தேகமும் வந்துவிட்டது.. அரிவாளை எடுத்து பழனியம்மாளை வெட்டி கொன்றுவிட்டார் தாத்தா..!
! கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ளது சேவாப்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பொன்னுச்சாமி.. இவரது மனைவி பழனியம்மாள்.. 55 வயதாகிறது..
இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.. இவருக்கு மணிநாயக்கர் என்று இன்னொரு பெயர் உள்ளது.. 70 வயதாகிறது. புஷ்பாவை பிரிந்த சுப்பிரமணி.. கள்ளக்காதல் கொண்ட உமா.. நடுவில் புகுந்த இருவர்.. கடைசியில் ஒரு கொலை! பழனியம்மாள் இந்த தாத்தாவுக்கும் பழனியம்மாளுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. அதுவும் 30 வருஷமாகவே இருந்துள்ளது.. இவர்களின் கள்ளக்காதல் தாத்தா வீட்டுக்கும் தெரியுமாம்..
பழனியம்மாள் வீட்டுக்கும் தெரியுமாம்.. ஆனாலும் எதை பற்றியும் இவர்கள் கவலைப்படாமல் உறவில் தொடர்ந்து இருந்து வந்துள்ளதாக தெரிகிறது,. விடிகாலை இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாகவே தாத்தாவுடன், பழனியம்மாள் பேசுவதில்லையாம்.. பலமுறை பழனியம்மாளிடம் தாத்தா பேச முயற்சி செய்தாராம்.. ஆனால், பழனியம்மாள் தான் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.. இதனால், நேற்று விடிகாலை 4 மணிக்கு பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவர் வீட்டுக்கு சென்றார் தாத்தா..
தூங்கி கொண்டிருந்த பழனியம்மாளை எழுப்பி தன்னுடன் பேசுமாறு கேட்டுள்ளார். கொலை ஆனால், பழனியம்மாள் அப்போதும் பேசவில்லை.. இதனால் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. அப்போது தாத்தா, "என்னை ஏமாத்திட்டியா? வேற ஆளை ரெடி செய்துட்டியா" என்று கேட்டுக் கொண்டே ஒரு அரிவாளை எடுத்து, பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்திலேயே சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் துடிதுடித்து இறந்துவிட்டார்..
அதிர்ச்சி இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான கள்ளக்காதலன் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்காக ஆஸ்பத்திரி அனுப்பிவைத்துள்ளனர். 55 வயது பெண்ணை 70 வயது தாத்தா முதியவர் வெட்டிக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.