விசா இன்றி ஐரோப்பாவிற்குள் நுழையபிரித்தானியர்கள் இனி இதை செய்யவேண்டும்:
05 Aug,2021
அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் ஐரோப்பா ஒன்றியத்திற்குள் நுழைய 7 யூரோ செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறையை கழிக்க ஐரோப்பவின் பிரதான இடங்களுக்கு செல்லும் பிரித்தானியர்கள், புதிய சுற்றுலா அமைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் செல்ல 6 பவுண்ட் செலுத்த வேண்டும்.
பிரான்ஸ், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லாத அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் 2022-ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் ஐரோப்பாவில் நுழைவதற்கான 6.20 பவுண்ட்(7 யூரோ) கொண்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பின் அந்த விண்ணப்ப படிவதாரால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை போன்ற பாதுகாப்பு சரிபார்ப்பு பணிகள் நடைபெறும், இதற்கு 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
படிவத்தில், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், சமீபத்தில் அவர்கள் எங்கு பயணம் செய்தார்கள் மற்றும் எந்த குற்றவியல் வழக்கு இருந்தால், அதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இதை எல்லாம் தாண்டி, அந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அந்த விசா மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விமான நிலையங்கள், சாலை மற்றும் படகு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கும் இது பொருந்தும்.
ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் செய்தித் தொடர்பாளர், 95 சதவீதத்திற்க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தானியங்கி ஒப்புதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.