ஈழத் முட்டை மிளகு சொதி!
22 Jul,2021
தேவையான பொருட்கள்:- முட்டை- 5, தக்காளி- 2, வெங்காயம்- 1, பச்சை மிளகாய் - 4, செத்தல் மிளகாய் - 2, உள்ளிப்பல் - 5, மஞ்சள் தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி, சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முட்டையை வேகவைத்து இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
ப.மிளகாய், உள்ளிப்பல் ,வெங்காயம் இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
தேங்காய்ப்பால் 1 கப் அளவு தயார் செய்து கொள்ளுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
கொதிக்கும் நீரில் வெட்டிய ப.மிளகாய் ,வெங்காயம்,கல் உப்பு மற்றும் உள்ளிப்பல் சேர்த்து 1 நிமிடம் மூடி போட்டு அவிய விடுங்கள்.
பின் மூடியை திறந்து சிறிதளவு மஞ்சள்த்தூள், 2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
மஞ்சள் தூளின் மணம் போக 1 நிமிடம் கொதிக்க விடுங்கள்.அதனுடன் 2 தக்காளி மற்றும் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து அதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போடாமல் ஒரு கொதி வந்ததும் கலந்துவிட்டு இரண்டாக வெட்டியை முட்டையை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
தாளிக்க அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் செத்தல் மிளகாய், சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நாம் தயார் செய்த சொதியில் சேர்த்தால் பாரம்பரிய முட்டை மிளகு சொதி தயார்.