பேக்கரியில் வேலை பார்த்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்
19 Jun,2021
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பட்டயகாரன்புதூரில் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்த போலீசார் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் குட்டி. இவர் தனது நண்பர்கள் சமீர் மற்றும் சகாபுதீன் ஆகியோருடன் இணைந்து கோவை மாவட்டம் அன்னூர் பட்டயகாரன்புதூர் பகுதியில் பேக்கரி கடை நடத்திவந்துள்ளனர். இவர்களது கடையில் திருச்சியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும் அவரது கணவரும் பணியாற்றினர்.
இந்த தம்பதியை உரிமையாளர் மொய்தீன்குட்டி கடைக்கு அருகில் இருந்த இடத்திலையே தங்கவைத்திருந்தார். ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டதால் வருமானம் இல்லாத்தால், பெண்ணின் கணவர் அருகில் இருந்த பஞ்சு மில்லிற்கு வேலைக்கு சென்றார்.இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த 21 வயது பெண்ணை கடந்த 5 ம் தேதி கடையின் உரிமையாளர்கள் மொய்தீன் குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சமீர், சிகாபுதீன் ஆகிய மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.நடந்த சம்பவத்தை கணவரிடம் சொன்னால் கொன்று விடுவோம் என்று மூவரும் மிரட்டியுள்ளனர்.
கொடூரமனம் கொண்ட மூவரும் மீண்டும் 7 ஆம் தேதி பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். மனமுடைந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கூட்டுபலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கேரளமாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருந்த சமீர், சிகாபுதீன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மொய்தீன் குட்டியை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.