கடந்த 12ம் திகதி, வெளிநாட்டு தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து, இந்திய பொலிசாருடன் தொடர்பை ஏற்படுத்திய மர்ம நபர் ஒருவர். இலங்கையில் இருந்து ஆயுதங்கள் தமிழ் நாட்டிற்குள் வர உள்ளது என்றும். அது படகு மூலமாக வரப் போகிறது என்றும். முஸ்லீம்களே இதனை கடத்துவதாகவும் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அழைத்து, இந்த ஆயுதங்களை இலங்கை புலனாய்வுத்துறை சிலருக்கு கொடுத்து. அதனை இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்வதாக கூறி தொடர்பை துண்டித்தார். இதனால் தமிழக Q பிரிவு உஷாராகி, டெல்லி சி.பி.ஐ மற்றும் ரா உளவு பிரிவை தொடர்பு கொள்ள. விடையம் பெரிய அளவில் சென்றது. தமிழ் நாட்டுக்கு வராமல் சில வேளை கேரளா உடாக ஊடுருவக் கூடும் என்ற பயம் காரணமாக இந்திய மத்திய புலனாய்வுக் குழு, கேரள அரசை எச்சரிக்க. கேராள கடலோரக் காவல் படையும் உஷாரானது. இன் நிலையில்..
இந்திய மத்திய அரசு கொழும்பு மற்றும் யாழுல் உள்ள இந்திய தூதுவர்களை ரகசியமாக தொடர்பு கொண்டு, ஏதாவது தகவல் கிட்டியதா என்று கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் கையை விரித்து விட்டார்கள். இதனால் இந்திய மத்திய அரசின் உத்தரவின் பேரில், இந்திய கடல்படை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தது. முதலில் இதனை இலங்கைக்கு அறிவிப்பதா ? இல்லையா என்ற கோணத்தில் றோ அமைப்பு ஆலோசனைகளை நடத்தி. இறுதியாக இலங்கை கடல்படைக்கு அறிவித்துள்ளது. ஆனால் இலங்கை கடல்படையினர், அப்படி எந்த ஒரு நடமாட்டமும் இல்லை என்று அறிவிக்க. இந்தியா றோ அமைப்பு மேலும் சந்தேகம் கொண்டுள்ளது.
தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்த விவகாரத்தில் இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் டிஐஜி அஜித ரோஹண, இந்த எச்சரிக்கை தகவல் தொடர்பாக இன்டர்போல் காவல்துறையிடம் மேலதிக குறிப்புகள் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தாராம். ஆனால் இலங்கை தான் ஆயுதங்களை கொடுத்தது என்று, மர்ம நபர் கூறியதால். இந்தியா இலங்கையை நம்ப வில்லை. முன்னர் 2 சிங்கள மொழி பேசும் நபர்கள் அடங்கலாக 23 பேர் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக படகில் வந்து பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தொழில்பேட்டையில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினர் கடந்த 10ஆம் தேதி கைது செய்தனர்.
அந்த ஆயுதக் கடத்தல் குழு அவர்களாக இருக்க கூடுமோ என்று நினைத்து Q பிரிவு அங்கே சென்று தடுப்புக் காவலில் இருந்த ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மூன்று ஃபைபர் படகுகள் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக தெரிய வந்ததால், அவர்களுக்கும் மதுரை காவல் நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் க்யூ பிரிவினர், மதுரை காவல் நிலையத்துக்கு கடந்த 12ஆம் தேதி வந்த மர்ம அழைப்புகளின் பின்னணியை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அதில், வெளிநாட்டு செல்பேசி எண்ணில் இருந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசிய நபர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பனைக்குளத்தைச் சேர்ந்த தாஜுதீன், பஹருல் அமீன், அன்வர் ராஜா, ஷேக் அலாவுதீன், ஹுசேன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஐந்து சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தகர கொட்டகை போட்டுள்ளதாகவும், இது பற்றி நூருல் அமீன் மூலம் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாகவும் தெரிய வந்தது. இதனால் கோபம் அடைந்த தாஜுதீன், பஹருல் அமீன் உள்ளிட்ட ஐந்து பேர், நசீர் குறித்தும் அவரது மகன் பற்றியும் உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவதூறான தகவல்களை பரப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகார் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நிலுவையில் இருந்துள்ளது. இந்த பின்னணியில் நசீர், நூருல் அமீன், பரக்கத்துல்லா ஆகியோரை தீவிரவாதிகளாக சட்ட அமலாக்க அமைப்புகளிடம் சிக்க வைக்க தாஜுதீன், பஹருல் உள்ளிட்ட ஐந்து பேர் திட்டமிட்டே ஓர் ஆயுத கடத்தல் போலி தகவலை செல்பேசி வாயிலாக பரப்பியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் இந்திய உள்துறை அதிகாரி தெரிவித்தார். தற்போது தாஜுதீன், மற்றும் பஹருல் உள்ளிட்ட 5 பேரையும் பொலிசார் பிடித்து லாடம் கட்டி வருகிறார்கள். இவர்கள் செயலால் மத்திய அரசு, உள்துறை அமைச்சு, றோ அமைப்பு, இலங்கை கடல்படை மற்றும் இன்ரர் போல் வரை இந்த விடையம் சென்றுள்ளது.
போதக் குறைக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களை வேறு பொலிசார் புரட்டி எடுத்து விட்டார்கள். நில சண்டையில் இப்படி ஒரு பரபரப்ப ? என்ன கொடுமை.
கண்ணன்