32 வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்- தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி
07 Jun,2021
தென் ஆப்பிரிக்காவில் ஹெச்.ஐ.வி. பாதிப்பினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 216 நாட்களில் அவர் உடலுக்குள்ளேயே 32 வகை உருமாற்றம் அடைந்ததை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.ஐ.வி தொற்றிய இந்தப் பெண்ணுக்கு செப்டம்பர் 2020-ல் கொரோனா வைரஸ் தொற்றியது. சுமார் 216 நாட்கள் இந்தப் பெண்ணின் உடலில் கொரோனா தொற்று இருந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 32 வகை உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைந்துள்ளது.
medRxiv என்ற மருத்துவ இதழில் இது தொடர்பான செய்தி வியாழனன்று வெளியானது. இந்தப் பெண்ணுக்கு 2006-ல் ஹெச்.ஐ.வி தொற்றியது. அதன் பிறகே நோய் எதிர்ப்பாற்றல் படிப்படியாக குறைந்து போனது. இந்நிலையில் 2020-ல் கோவிட்-19 தொற்றியது. இது அவரது உடலில் 32 வகையான உருமாற்றங்களை அடைந்துள்ளது.
இதில் கவலையளிக்கக் கூடிய E484K, ஆல்பா வகையான B.1.1.7, N510Y உள்ளிட்ட கவலையளிக்கக் கூடிய உருமாற்ற வைரஸ்களும் அவரது உடலில் காணப்பட்டன.
இந்தப் பெண் மற்றவர்களுக்கு இந்த உருமாறிய வைரஸ் தொற்றைப் பரவச் செய்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வேரிய்ண்ட்கள் குவாசுலு நட்டால் போன்ற பகுதிகளில்தான் இந்த வேரியண்ட்கள் அதிகம் தொற்றியுள்ளன, இங்கு 4-ல் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் இருக்கிறது. ஹெச்.ஐ.வி. இருப்பவர்களுக்கு கோவிட் கட்டாயம் தொற்றும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லையெனினும் இதனால் கடுமையான மருத்துவ பின் விளைவுகள் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படி ஹெச்.ஐ.வி முற்றிய நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்றினால் இவர்கள் உலகிற்கே தொற்றின் தொழிற்சாலையாகி விடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உடல் எதிர்பாற்றல் கடுமையாகக் குறைந்த ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கு கொரோனா தொற்றினால் அது நீண்ட நாட்கள் அவர்களது உடலில் இருக்கும். தற்போது ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகி கோவிட் தொற்றிய இந்தப் பெண் டி ஆலிவெய்ராவுக்கு சாதாரண நோய் அறிகுறிகள்தான் தோன்றின.
இந்த ஆய்வாளர்கள் விடுக்கும் மற்றொரு எச்சரிக்கை என்னவெனில் இந்தியாவில் 10 லட்சம் ஹெச்.ஐ.வி. நோயாளிகள் சிகிச்சை பெறாமல் உள்ளனர், இவர்களுக்கு கொரோனா தொற்றினால் பெரும் கவலைதான் என்று எச்சரித்துள்ளனர்.