இறந்தவர்களெல்லாம் கனவில் வருகிறார்கள்... கனடாவை மிரட்டும் மர்ம நோய்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்!
07 Jun,2021
நீண்ட காலம் இது குறித்த ஆராய்ச்சிக்கு பின்னரும் விஞ்ஞானிகளால் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை, இதுவரை இந்த நோய்க்கு அவர்கள் இன்னமும் பெயர் வைக்கவில்லை.
கனடாவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களெல்லாம் கனவில் வரும் இந்த மர்மமான மூளை நோய்க்கு இதுவரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். பெயரிடப்படாத இந்த நோய்க்கான காரணம் என்ன என தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கனடாவின் சின்னஞ்சிறு நியூ புருன்ஸ்விக் மாகாணத்தில் மட்டுமே இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 48 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு தூக்கமின்மையும், தூங்கினாலும் கூட மரணமடைந்தவர்களெல்லாம் கனவில் வருவதாக சொல்லப்படுவதால் கனடா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறியும் பணியில் இரவு, பகல் பாராமல் கனடா நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதல் முறையாக கண்டறியப்பட்டதாகவும். டஜன் கணக்கானவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக சுகாதாரத்துறையினரின் கவனம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மாறியது.
நீண்ட காலம் இது குறித்த ஆராய்ச்சிக்கு பின்னரும் விஞ்ஞானிகளால் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை, இதுவரை இந்த நோய்க்கு அவர்கள் இன்னமும் பெயர் வைக்கவில்லை.
இந்த நோய் சுற்றுப்புற சூழலால் பரவுமா? மரபு ரீதியாக பரவுமா?0 மான் கறி அல்லது மீன் இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா? இது எதுவுமே காரணம் இல்லை என்றால் எப்படித்தான் பரவுகிறது என பொதுமக்களின் கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் பதிலளிக்கவோ, விளக்கம் தரவோ முடியவில்லை.
இந்த நோய் குறித்து பொதுமக்களுக்கு கடந்த மார்ச் மாதம் தான் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ புருன்ஸ்விக் மாகாண தலைமை மருத்துவ அதிகாரி இந்நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நரம்பியல் நிபுணரான நீல் கேஷ்மேன் கூறுகையில், நூற்றாண்டுகளில் ஒரு முறை தான் இது போன்ற நோய் ஏற்படும் என கூறினார். மேலும் இந்த நோயானது 18 முதல் 84 வயதுடையோருக்கும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்ற்னார்.