வெள்ளி கிரக ஆராய்ச்சி: ஆய்வாளர்கள் ஆர்வம்
07 Jun,2021
வீனஸ்' எனப்படும் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு விண்கலங்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' திட்டமிட்டுள்ளது.
இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்களை ஆய்வு செய்யும் முயற்சி நீண்டகாலமாகவே நடந்து வருகின்றது. அதில் ஒன்றான வெள்ளி கிரகத்துக்கு வரும் 2028 - 2030 ஆண்டுக்குள் இரண்டு விண்கலங்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது:வெள்ளி கிரகத்தை ஆய்வதற்காக பல முயற்சிகள் நடந்துள்ளன.இந்த பயணங்கள் மூலம் பல தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதிகம் அறியப்படாத வெள்ளி கிரகம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கிரகத்தின் மேற்பரப்பு 'சல்பியூரிக் ஆசிட்' டால் நிரம்பி உள்ளது. மேலும் காற்று மண்டலத்தின் 98 சதவீதம் கார்பன் டை ஆக்சைடால்நிரம்பி உள்ளது.சூரியனுக்குப் பிறகு மிகவும் வெப்பமான கிரகமாக இது கருதப்படுகிறது. அங்கு 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ளது. ஆனால் இந்த கிரகம் 50 கோடி ஆண்டுகளுக்கு முன் முழுதும் உறைந்திருந்ததாக கருதப்படுகிறது.நம் பூமியின் மேரற்பரப்பில் கார்பன் டை ஆக்சைடு பாறைகளில் உள்ளது. அதனால் நாம் சுவாசிக்க முடிகிறது.வெள்ளி கிரகம் இப்படி வெப்ப கிரகமாக மாறியது ஏன் என ஆராய்ந்தால் பூமியை காப்பாற்றுவதற்கு வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.