நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்வீட் நியூஸ்... நீங்க மாம்பழம் சாப்பிடலாம்
03 Jun,2021
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாம்பழ சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சாப்பிட்டால் சர்க்கரையில் அளவு அதிகரித்து விடுமோ என்ற பயம் இருக்கும்.
இது குறித்து கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண்நீரிழிவு நோயாளிகள் எந்த அளவில் மாம்பழத்தை எடுத்து கொள்ளலாம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
நீரிழிவு நோயாளிகள் அவர்களின் சர்க்கரையின் அளவு, கண்ட்ரோலில் இருந்தால் மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் மாம்பழம் சாப்பிடும் அளவை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை சாப்பிடலாம் என்றும், காலை டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் நடுவில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது என்றும், இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.