கொரோனா பாதிப்பு இல்லாத 32 பேருக்கு கருப்பு பூஞ்சை. எப்படி பரவுகிறது.. ஏன் ஆபத்தானது?
27 May,2021
பஞ்சாப் மாநிலத்தில் 158 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2 லட்சத்திலும், உயிரிழப்புகள் 4 ஆயிரத்திலும் உள்ளன.
கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாகவே உள்ளது. அதேபோல கொரோனாவுடன் சேர்ந்து பூஞ்சை பாதிப்பும் தற்போது நாட்டிற்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. கருப்பு பூஞ்சை பாதிப்பு கருப்பு பூஞ்சை தாக்குதல் முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. இந்தியாவில் நேற்று வரை 11,717 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ள குறிப்பாகக் குஜராத்தில்
அதிகபட்சமாக 2859 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 236 பேருக்குக் கருப்பு பூஞ்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பொதுவாக, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் நீடிக்குமா - முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அறிவிப்பு கொரோனா இல்லாதவர்கள் ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 158 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள்
என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். இது கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. \"போலியோ மாடல்\".. ஸ்பாட் ரிஜிஸ்டிரேஷன்.. வேக்சின் போடுவதில் அசத்தும் தமிழக அரசு.. குட்நியூஸ்! காரணம் என்ன இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநிலத்தின் கருப்பு பூஞ்சைக்கான பஞ்சாப் நோடல் அதிகாரி டாக்டர் ககன்தீப் சிங், "நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள யாரும் கருப்பு பூஞ்யை நோயால் பாதிக்கப்படலாம். கருப்பு பூஞ்சை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் நோய் இல்லை
இந்த பாதிப்பை நாம் தொடக்கக் காலத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. கொரோனா என்று இல்லாமல் எந்தவொரு நோய்க்கும் அதிக அளவு ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்ளும் நபருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும்" என்றார். கொரோனா வைரஸ் உருவானது எப்படி?.. 90 நாட்களில் அறிக்கை.. உளவுத் துறைக்கு பிடன் உத்தரவு மாற்றுச் சிகிச்சை முறை மேலும், இது குறித்து கோவிட் வல்லுநர் குழு உறுப்பினர் கேகே தல்வார் கூறுகையில், "கொரோனா சிகிச்சையில் அதிகப்படியான ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்துகிறது
மாற்று மருந்துகளைப் பயன்படுத்துமாறு மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மாற்றுச் சிகிச்சை முறைகளை இறுதி செய்ய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்" என்றார். அறிகுறிகள் & மருத்துவம் இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. கண்கள் அல்லது மூக்கைச் சுற்றி வலி, கண் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த வாந்தி ஆகியவை கருப்பு பூஞ்சை பாதிப்பின் சில அறிகுறிகளாகும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு Amphotericin- B drug என்ற மருந்து அளிக்கப்படுகிறது.