உடலுறவு கொள்வது ஆணுறுப்பிற்கு நல்லது தெரியுமா?
20 May,2021
ஆண்கள் அனைவருமே தங்கள் ஆணுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை, சொல்லப்போனால் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் செயல்களைத்தான் அதிகம் செய்கிறார்கள். ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உங்கள் உணவுமுறையிலும், வாழ்க்கை முறையிலும் கண்டிப்பாக சில மாற்றங்கள் தேவை. மேலும் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் ஆணுறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ்வது அதிக சுறுசுறுப்பான வாழ்க்கையையும், தவறாமல் உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு பாலியல் செயல்பாடுகளின் சிறந்த விகிதங்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அதேசமயம், அத்தகைய வாழ்க்கையை நடத்தாத மற்றும் சுறுசுறுப்பாக செயல்படாதவர்களுக்கு குறைந்த அளவு விறைப்பு மற்றும் பாலியல் செயல்பாடு இருந்தது. புகைப்பிடிப்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் யூராலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 8 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 20 சதவீதம் பேர் விறைப்புத்தன்மை பிரச்சினையை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்டனர்.
இவர்களில், நிகோடின் பயன்பாடு இல்லாத 75 சதவிகிதத்தினர் சிறந்த செயல்திறன், உறுதியான விறைப்புத்தன்மை மற்றும் நீண்ட நேர விறைப்புத்தன்மையை அனுபவித்தனர். இது விறைப்புத்தன்மையின் அறிகுறிகளை மேம்படுத்த உதவியது. மோசமான பல் சுகாதாரம் இது விநோதமாகத் தோன்றலாம், ஆனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சினைஇருந்தால், அவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. விறைப்புக் குறைபாடு உள்ள ஆண்களில் ஈறு நோய் ஏழு மடங்கு அதிகம்.
ஏனென்றால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் பயணிக்கக்கூடும் மற்றும் உங்கள் ஆண்குறியில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கும். MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கொரோனா தொற்று ஆபத்தான நிலைக்கு போயிருச்சுனு அர்த்தமாம்... உஷார்...! தேவைப்படும் அளவை விட குறைவாக தூங்குவது நீங்கள் போதுமான அளவு தூங்காதபோது, டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறையக்கூடும். இது சோர்வை ஏற்படுத்துகிறது மற்றும் உங்கள் தசை மற்றும் எலும்பு அடர்த்தியைக் கூட பாதிக்கலாம்.
இந்த காரணிகள் அனைத்தும் உங்கள் ஆண்குறியை மோசமாக பாதிக்கின்றன. போதுமான அளவு உடலுறவு கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு போதுமான அளவு உடலுறவு எவ்வளவு என்பது நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசின் ஒரு ஆய்வில், வாரத்திற்கு ஒரு முறைக்கு குறைவாக உடலுறவு கொள்வது ஆண்களில்விறைப்புத்தன்மை பிரச்சினை ஏற்படும் வாய்ப்பை இரட்டிப்பாக்கும் என்று கூறியுள்ளது. உடலுறவின் சிறந்த விகிதம் ஒவ்வொரு வாரமும் மூன்று முறை உடலுறவு கொள்ள வேண்டும்.
தர்பூசணி சாப்பிடாமல் இருப்பது உங்கள் உடலின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் மூலப்பொருளான சிட்ரூலின்-அர்ஜினைனின் தர்பூசணியில் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கிறது மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். உங்கள் அன்றாட உணவில் தர்பூசணி உட்கொள்ளலை அதிகரிப்பது நல்லது. அதிகளவு டிரான்ஸ் கொழுப்பு சாப்பிடுவது உங்கள் உடலில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் உள்ள விந்தணுக்களின் தரம் குறைந்துவிடும்.
எனவே நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட்டு, உங்கள் விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது நல்லது. MOST READ: 50 கோடி மக்களின் உயிரை பறித்த வரலாற்றின் கொடூரமான தொற்றுநோய் ஏன் இதுவரை முடிவுக்கே வரவில்லை தெரியுமா? அதிக நேரம் டிவி பார்ப்பது ஒரு வாரத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக டிவி பார்க்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துவிட்டதாக ஆய்வு கூறியது.