பிரபல இயக்குனரை கொன்று துண்டுகளாக்கி குப்பையில் வீசிய தந்தை!
20 May,2021
லண்டனில் குறும்படங்கள் பல இயக்கிய திரைப்பட இயக்குநர் ஒருவரை, அவரது தந்தையே கொன்று துண்டுகளாக்கி குப்பையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானைச் சேர்ந்த Babak Khorramdin (47), டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில், திரைப்படப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். மேலும் திரைப்படங்கள் குறித்து கற்பதற்காக லண்டனுக்கு குடிபெயர்ந்த Babak, பின்னர் ஈரான் திரும்பி மாணவர்களுக்கு திரைப்படம் தொடர்பான கல்வி பயிற்றுவித்துவந்தார்.

லண்டனிலிருக்கும்போது, Crevice and Oath to Yashar முதலான பல குறும்படங்களை உருவாக்கினார் அவர். இந்நிலையில், Ekbatan என்ற நகரில், Babakஇன் உடல் பாகங்கள் சூட்கேஸ் ஒன்றிலும், குப்பை போட பயன்படுத்தும் கவர்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸ் விசாரணையில், அது ஒரு கௌரவக் கொலை என்பது தெரியவந்தது. Babak, திருமணம் செய்துகொள்ளாமலே இருந்தது குறித்து அவருக்கும் அவரது தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மகனுக்கு மயக்க மருந்து கொடுத்த Babakஇன் தந்தை, கத்தியால் குத்தி அவரைக் கொன்றுவிட்டு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, குப்பையில் வீசியிருக்கிறார். Babakஇன் தந்தை தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பொலிசார் அவரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளார்கள்.