பாலியல் உறவை தவிர்க்கத் தூண்டும் கட்டாய சூழல்கள்

20 May,2021
 

 
 
பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல தம்பதி "இரவில் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்வது" போல வாழ்ந்ததாக டெக்சாஸின் ஹ்யூஸ்டன் நகரைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் எமிலி ஜெமியா கூறுகிறார்.
 
முன்னதாக வீட்டிற்கு வெளியே பல கடமைகளில் உழன்ற தம்பதி, தொற்றுநோய் காரணமான பொதுமுடக்கத்தின்போது தங்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக உணர்ந்தனர்.
 
வீட்டிலேயே இருப்பதால் மெத்தனமாக இருந்தபடி, நெருக்கமான தருணங்களுக்கு, அதிக நேரம் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் அவர்கள் கருதினர்.
 
"ஆரம்பத்தில், விடுமுறை நாட்களில் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்களைச் செய்ய அது அவர்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால், தொற்றுநோய் முடிவின்றித்தொடர்ந்தபோது, நெருக்கமான உறவுகள் மீது அது `பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது' என்று ஜெமியா கூறுகிறார்.
 
"பெரும்பாலான தம்பதிக்கு, பாலியல் ஆசை அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்றே சொல்லலாம்," என்கிறார் இவர்.
 
தொற்றுநோய் காலத்தில் இது ஒரு உலகளாவிய நிகழ்வா?
 
உலகெங்கிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள், இதே போன்ற பல கதையைச் சொல்கின்றன.
 
2020ஆம் ஆண்டில் துருக்கி, இத்தாலி, இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், பலருக்கும் தங்களின் இணையுடன் பாலியல் உறவு அல்லது சுய இன்பத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இது பொதுமுடக்கத்துடன் நேரடி தொடர்பை சுட்டிக்காட்டுகிறது.
 
"இதற்கு முக்கியமான காரணம், இந்த காலகட்டத்தில் பலரும் மிகவும் அழுத்தத்தின் கீழ் இருந்தே என்று நான் கருதுகிறேன்," என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட, இந்த ஆய்வை நடத்திய 'தி கின்சி இன்ஸ்டிடியூட்டின்' சமூக உளவியலாளரும், ஆராய்ச்சியாளருமான, ஜஸ்டின் லெஹ்மில்லர் தெரிவிக்கிறார்.
 
தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், பெரும்பாலானோருக்கு நிச்சயமற்றதாகவும் அச்ச சூழலையும் உருவாக்கியது. முன்னெப்போதும் இருந்திராத வகையில் உடல்நலம் தொடர்பான கவலை, நிதி பாதுகாப்பின்மை மற்றும் பிற குறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றங்களை மக்கள் அனுபவித்தனர்..
 
இந்த காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தோடு கூடவே முடங்கிய வீட்டு அறையில் மற்றொரு நபருடன் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் போன்றவை, மக்களின் பாலியல் வாழ்க்கையில், குறிப்பிடத்தக்க சரிவுக்கு பங்களித்தன.
 
சொல்லப்போனால் கோவிட் -19 , உலக அளவில் பாலியல் உறவு கொள்ளும் தன்மைக்கு நச்சாக ஆகியுள்ளது.
 
இந்த நிலையில் தொற்றுநோய் தொடர்பான மன அழுத்தம் விலகிய பிறகு, நாம் சிறப்பான பாலியல் உறவுக்குள் மீண்டும் செல்ல முடியுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் நம் உறவுகள் நீண்டகால சேதத்தை சந்தித்திருக்குமா?
 
ஆசையில் வீழ்ச்சி
 
பல தம்பதி, பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் தங்களின் பாலியல் வாழ்க்கையில் ஒரு குறுகியகால ஏற்றத்தை அனுபவித்தனர் என்று ஜெமியா குறிப்பிடுகிறார்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் சமூக உளவியலாளரும் உதவி பேராசிரியருமான ரோண்டா பால்ஃஜாரினி, பாலியல் ஆசைகளில் ஏற்பட்ட இந்த ஆரம்ப ஏற்றத்தை, "மன அழுத்தத்தின்போது மக்கள் ஆக்கபூர்வமாக நடந்து கொள்ளும் `தேனிலவு' கட்டம்," என்று விவரிக்கிறார்.
 
"இந்த கட்டத்தில், மக்கள் ஒன்றாக வேலை செய்ய முனைகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் அவர்கள் வீட்டிற்குச்சென்று கழிப்பறை காகிதத்தைக் கொடுப்பதாகவும் கூட அது இருக்கலாம்," என்று பால்ஃஜாரினி கூறுகிறார்.
 
"ஆனால் காலப்போக்கில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியபோது மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானார்கள். சக்தி குறைகிறது. ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு ஏற்படத்தொடங்குகிறது. அது நடக்கத் தொடங்கும் போது இதுபோன்ற தம்பதி, சிக்கலில் மாட்டிக்கொள்வதை நாம் பார்க்கமுடிகிறது," என்று பால்ஃஜாரினி மேலும் குறிப்பிடுகிறார்.
 
தொற்றுநோயின்போது பால்ஃஜாரினியும் அவரது சகாக்களும் 57 நாடுகளில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பங்கேற்பாளர்களிடையே நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. கூடவே பெருந்தொற்றின் ஆரம்பத்தில் கூட்டாளர்களிடையே அதிக பாலியல் ஆசையுடன் தொடர்புடைய நிதி அக்கறை போன்ற காரணிகளை அவர்கள் கண்டனர்.
 
இருப்பினும் காலப்போக்கில், தனிமை, பொது மன அழுத்தம் மற்றும் கோவிட் -19-தொடர்பான குறிப்பிட்ட கவலைகள் உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான மனஅழுத்தங்கள் மக்களிடையே அதிகரித்ததால், தங்களின் இணை மீதான பாலியல் ஆசை குறைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
மன அழுத்தங்கள், மனச்சோர்வு மற்றும் பாலியல் ஆசை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புதான், இந்த ஆய்வின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று பால்ஃஜாரினி தெரிவிக்கிறார்.
 
சோர்வடைந்த மக்கள், அதிகரிக்கும் அழுத்தம்
 
தொற்றுநோயின் தொடக்கத்தில், மன அழுத்தங்கள் "மனச்சோர்வைத் தூண்டவில்லை" என்று அவர் விளக்குகிறார். ஆனால் அந்த அழுத்தங்கள் நீடித்தபோது, மக்கள் சோர்ந்து போனார்கள்.
 
மன அழுத்தம் , மனச்சோர்வுடன் தொடர்புடையது. மற்றும் "மனச்சோர்வு, பாலியல் ஆசை மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.
 
தொற்றுநோயால் ஏற்படும் அன்றாட மனஅழுத்தங்களுக்கு மேலதிகமாக, உலகெங்கிலும் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பு விகிதங்கள் அதிகரித்ததால், வைரஸின் பெரிய அச்சுறுத்தல் கண்முன்னே விரிந்தது.
 
எப்போதும் இருந்து வரும் இந்த ஆபத்து தம்பதிகளின் ஆசையை அழிப்பதில் பங்குவகித்தது. "பாலியல் சிகிச்சையாளர்கள், 'இரண்டு வரிக்குதிரைகள் சிங்கத்தின் முன் பாலியல் உறவு கொள்வதில்லை 'என்று சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்," என்று ஜெமியா கூறுகிறார்.
 
"நம்முன்னே ஒரு பெரிய அச்சுறுத்தல் இருந்தால், இப்போது உடலுறவு கொள்ள நல்ல நேரம் இல்லை என்று அது நம் உடலுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.
 
அந்தக் காரணத்தால் அதிகரிக்கும் மன அழுத்தம், குறைவான இச்சை அல்லது தூண்டப்படுவதில் சிரமம் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
 
மிக அதிக நேரம் ஒன்றாக இருத்தல்
 
 
தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் தம்பதி, பகல் நேரத்தில் ஒன்றாக குளிப்பது அல்லது மதியம் ஒன்றாக நீந்துவதைப் பற்றி பால்ஃஜாரினி கேள்விப்பட்டாலும், இயல்பானதை விட சுகமான இந்த அனுபவங்கள் இறுதியில் "தங்கள் கவர்ச்சியை இழந்தன" என்று அவர் கூறுகிறார்.
 
பின்னர் வீடு கலைந்து கிடப்பது போன்ற தினசரி பிரச்னைகள் தலைதூக்கி, ஒருவர் மற்றவர் மீது குறைகூறும் போக்கு மெதுவாக தலைதூக்கியது.
 
லெஹ்மில்லர் இதை " ப்ரஸ்பர குறை நிறைகளை அறிந்துகொள்வதன் விளைவு" என்று விவரிக்கிறார், "உங்கள் கூட்டாளியிடம் இருக்கும் சில பழக்கங்கள் உங்களை எரிச்சல் பட வைக்கும் வாய்ப்பை இது அளிக்கிறது," என்கிறார் அவர்.
 
பொதுமுடக்கத்தின் போது ஒவ்வொரு நேர உணவையும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கும் வரை, தன் பார்ட்னர் இவ்வளவு சத்தமாக மென்று சாப்பிடுவார் என்பதை தான் ஒருபோதும் உணரவில்லை என்று யாரோ ஒருவர் தன்னிடம் சொன்னதை நினைவு கூர்ந்தார் பால்ஃஜாரினி..
 
ஒன்றாக செலவிடும் இந்த அதிகரித்த நேரம், பாலியல் உற்சாகத்தை குறைக்கக்கூடும்.
 
"ஒரு நீண்டகால உறவில் ஆசையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு திறவுகோல், உங்கள் கூட்டாளரைப் பற்றிய மர்ம உணர்வை கொண்டிருப்பதும், சிறிது இடைவெளியை பராமரிப்பதுமாகும்," என்று லெஹ்மில்லர் கூறுகிறார்.
 
"நீங்கள் எந்நேரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கும்போது... மர்மத்தின் உணர்வு நீங்கி விடும்," என்கிறார் அவர்.
 
தொற்றுநோய்க்கு முந்தைய சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்ட மக்கள், தங்கள் சுயமதிப்பை இழக்கத் தொடங்கலாம். இது பாலியல் சுயநம்பிக்கையையும் செயல்திறனையும் பாதிக்கும்.
 
பெருந்தொற்று காலத்தில், வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டில் பள்ளிக்கல்வி ஆகியற்றின் சுமை பெரிதும் பெண்கள் மீது விழுந்ததால் அவர்கள் தங்கள் அலுவலக வேலையில் முழுகவனம் செலுத்த முடிவதில்லை.
 
"இது நிறைய பெண்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று ஜெமியா கூறுகிறார். "[தொழில்] சுய அடையாளத்தின் ஒரு பெரிய பகுதி. நாம் அனைத்தையுமே நமது படுக்கையறைக்குள் கொண்டு வருகிறோம். திடீரென்று நாம் யார் என்று நமக்கே தெரியாவிட்டால், கொண்டு வர எதுவுமே இல்லை என்ற உணர்வை அது தரக்கூடும்," என்கிறார் அவர்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies