ஹீத் ரூவில் நூறு இந்தியர்கள் வந்து இறங்க 1000 வெளிநாடுகள் செல்ல பயணிகள் !
18 May,2021
நேற்று(17) ம் திகதியோடு சுற்றுலா செல்ல இருந்த தடையை பிரித்தானியா விலக்கியது. எங்கே அந்த நாள் வரும் என்று காத்துக் கிடந்த பல ஆயிரம் பயணிகள் அன்றைய தினமே வெளிநாடுகள் செல்ல, லண்டன் ஹீத் ரூ விமான நிலையம் சென்றுள்ளார்கள். அதேவேளை இந்தியாவில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் வந்து இறங்கிய வண்ணம் இருந்துள்ளார்கள். சுமார் 1,000யிரம் பயணிகளுக்கு மேல், 3 மணி நேரமாக அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பயணிகளோடு ஒன்றாக இமிகிரேஷனின் நின்றுள்ளார்கள்ஸ தற்போதுஸ
இவர்களுக்கும் கொரோனா தொற்றியிருக்க வாய்ப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. எப்படி இந்தியாவில் இருந்து இன்றுவரை பிரிட்டனுக்கு விமானங்கள் ஓடுகிறது என்பது பெரும் ஆச்சரியம் தான். ஆனால் ஓடுகிறது. இதில் வரும் பல பயணிகள் கள்ள சான்றிதழ்களை கொடுத்து, பிரிட்டனுக்கு வருகிறார்கள் என்பது பிரித்தானியாவுக்கு தெரியாத விடையம் அல்ல. ஆனால் ஏன் அனுமதிக்கிறார்கள் என்பது தான் இன்று வரை புரியாத புதிராக உள்ளது.