காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த மருத்துவத்தை நாடினால் ரெம்டெசிவிர் தேவையில்லை -
14 May,2021
சென்னை : காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த மருத்துவத்தை நாடினால் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இம்ப்காப்ஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா முதல் அலைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கபசுர குடிநீரை இந்திய ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகரித்து இந்தியா முழுவதும் விநியோகிக்குமாறு கூறியுள்ளது எனத் தெரிவித்தார்.
மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய கபசுர பொடியை குடிசை தொழிலாக சிலர் போலியாக தயாரித்து வருவதால் உண்மையான கபசுர குடிநீரை கவனத்துடன் வாங்க மக்களை அறிவுறுத்தினார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க தாளக பஸ்பம், முத்து பஸ்பம், பவள பஸ்பம் ஆகியவற்றை குடிக்கவேண்பாலா டும் என்றும் அஜீப் மருந்தை ஆவி பிடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும் என்றும் பாலசஞ்சீவி, கஸ்தூரி மாத்திரைகள் வழங்குவதால் கொரோனா காரணமாக இழந்த சுவை, மணத்தை திரும்பப் பெற முடியும் என்று தெரிவித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு பூர்ண சந்திரோதியம் மருந்து வழங்கினால் நல்ல பலனை அளிக்கும் என தெரிவித்த கண்ணன், எளிய வழிமுறையாக பின்பற்றப்படும் ஆவி பிடித்தல் நல்ல பலனை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது எனக் கூறினார்.