தமிழகம், கேரளா உள்பட 7 மாநிலங்களில் மோசடி செய்த "நடமாடும் நகை கடை".. அம்பலமாகும் ஹரிநாடாரின் கைவரிசை
09 May,2021
வங்கிகளில் மிக குறைந்த வட்டிக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடிகளை மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. நடமாடும் நகைக் கடை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஹரி நாடார், பனங்காட்டு படை கட்சி என்ற கட்சியை தொடங்கி கடந்த சட்டசபைத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்கள் தப்ப முடியாது - சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்று டெபாசிட் இழக்காதவர் என்ற பெயரை பெற்றார். இவர் சுமார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதுமே அணிந்திருப்பார். ஹரிநாடார் பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் சாஸ்திரி. தொழிலதிபரான இவரிடம் ஹரி நாடார் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ 16 கோடியை பறித்துக் கொண்டு மோசடி செய்ததாக பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பெங்களூர் இதனிடையே ஹெலிகாப்டரில் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்தும் இவரது கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடாருடன் சேர்த்து 44 பேரும் வெல்லவில்லை. தேர்தல் முடிந்த நிலையில் ஓய்வுக்காக கேரள மாநிலம் சென்ற அவரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர். தயார் இதுகுறித்த விசாரணையில்
பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. ஹரி நாடார், ரஞ்சித் பணிக்கர் உள்ளிட்டோர் வெங்கட்ராமனிடம் 6 சதவீத வட்டியில் ரூ 360 கோடி கடன் வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளார். போலி வரைவோலைகள் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வங்கிக் கடன் தயாராகிவிட்டதாக ஹரி நாடார் கும்பல் தெரிவித்துள்ளது. சேவைக் கட்டணம் மேலும் அந்த கடனை பெற சேவைக் கட்டணமாக 2 சதவீதம் அதாவது ரூ 7.20 கோடி தர வேண்டும் என கூறி பணத்தை பறித்துள்ளனர். இதையடுத்து வங்கிக் கடனும் வாங்கித் தரவில்லை, வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து வெங்கட்ராமன் ஹரி நாடாரிடம் கொடுத்த பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொழிலதிபர்கள் ஹரி நாடார் தலைமையிலான கும்பல்
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் கடனாக பெற்று தருவதாக கூறி தொழிலதிபர்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு இதையடுத்து ஹரிநாடாரிடம் இருந்து இதுவரை 2 கோடி மதிப்பிலான நகைகள், 8.76 லட்சம் ரொக்கம், ஒரு கார் ஆகியவையும் அது போல் ரஞ்சித்திடம் இருந்து ரூ 10 லட்சம் நகைகள், வைர மோதிரங்கள், 96 ஆயிரம் ரொக்கம், காரையும் போலீஸார் பறிமுதல் செய்து ரஞ்சித்தின் வங்கிக் கணக்கில் இருந்த 36.85 லட்சம் பணத்தையும் முடக்கினர். இருவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.