நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதன் காரணமாக தான் காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சினைகள் நமக்கு அடிக்கடி ஏற்படுகிறது. மாறிவரும் நம் உணவுப் பழக்கவழக்கங்களால் இப்போதெல்லம் விரைவிலேயே தொற்றுநோய்களுக்கு
ஆளாகிவிடுகிறோம். அதுமட்டுமில்லாமல் இன்றைய உலகில், தொற்றுகள் நம்மை எளிதில் தாக்கும் அளவுக்கு நம்மில் பெரும்பாலானோர் நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டோடு இருக்கிறோம்.
கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள எளிமையாக வீட்டிலேயே என்ன செய்ய முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள்? அதற்கு இயற்கையாகவே கிடைக்கும் நம் வீட்டில் இருக்கும் 4 பொருட்களை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து வடிகட்டி குடித்தாலே போதும்.
அந்த நான்கு பொருட்கள் என்னென்ன? இதனால் எப்படி நன்மை கிடைக்கிறது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அதில் ஒரு 200 மிலி பசும்பால் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் 2 பூண்டு பற்களை அரைத்து கலந்துக்கொள்ளுங்கள். அடுத்து அதில் ஒரு 1/4 டீஸ்பூன் மஞ்சள், 1/4 டீஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் சுக்கு ஆகியவற்றை பொடியாக அரைத்து சேர்த்துக்கொள்ளுங்கள், இந்த மூன்று பொடிகளையும் நன்றாக கலந்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். அதை அடுப்பில் இருந்து இறக்கி சற்று ஆறவிட்டு வடிகட்டி குடிக்கலாம்.
தேவைப்பட்டால் பால் நன்கு ஆறிய பிறகு 1 டீஸ்பூன் தேன் கலந்தும் குடிக்கலாம். இனிப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள், எதையும் சேர்க்காமலும் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்த பாலில் 50 மிலி கொடுப்பது நல்லது. சோயா பால், பதப்படுத்தப்பட்ட பாலென்றில்லாமல் இயற்கையான பசும் பாலை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீர் காபிக்கு பதிலாக இந்த பால் குடித்தால் நாளைடைவில் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஒரு நாளுக்கு இரு தடவை இந்த பால் குடிக்கலாம். கொரோனா தோற்று தீவிரமாக பரவி வரும் இந்த வேளையில் நம் அனைவருக்கும் இந்த மருத்துவ குணம் நிறைந்த பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.
இந்த ஒரு டம்ளர் பால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை அகற்றவும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை போக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், பல உடல் நோய்களைக் குணப்படுத்தவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.