கோவை: இறந்த நிலையில் கிடந்த பாட்டியை, இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி... இவர்தான் அந்த பாட்டி.. 71 வயதாகிறது.. மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
கோவை கணுவாய் போலீசாருக்கு விஷயம் தெரிந்து விரைந்து வந்தனர்.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதோன், அந்த பாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது
பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது.. இறுதியில், புதுக்கோட்டை மாவட்டம் சேவகம்பட்டி பகுதியை சேர்ந்த, வினோத் என்பவர்தான் பாட்டியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது.. வினோத்துக்கு கருப்பையா என்று இன்னொரு பெயர் உள்ளது.. 25 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.
இதையடுத்து, வினோத்தை தேடிப்பிடித்து கைது செய்தனர்.. வினோத் பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறாராம்.. அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவி, மகளுடன் தங்கியிருந்துள்ளார்.. ஆனால், தற்போது வேலை எதுவும் இல்லாததால், போதிய வருமானமும் இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்துள்ளார். அப்போதுதான், தனியாக வசித்து வந்த பாட்டியின் வீட்டில் திருட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 17 ம்தேதி இரவு, பாட்டி வீட்டிற்குள் சென்று அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, 10 கிராம் மதிப்பிலான கம்மல், மூக்குத்தி, வளையல் போன்றவகைளை திருடி சென்றுள்ளார்.. பாட்டியின் செல்போனையும் எடுத்து வைத்து கொண்டார்..
அங்கிருந்து கிளம்பி போகும்போது, இறந்த நிலையில் கிடந்த பாட்டியை சடலம் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இவை அனைத்தையும் வினோத் போலீசாரிடம் வாக்குமூலமாகவே தந்துள்ளார். இப்போதுவினோத் மீது கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
பாட்டிக்கு, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்... ஆனால், அவர்கள் எல்லாருக்குமே கல்யாணமாகி வேறு வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.. அதனால் பாட்டி மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்... இதைதான், காமுகன் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.. ஆரம்பத்தில் நகைக்காகவே இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்பட்டது. பிறகுதான், போஸ்ட் மார்ட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்களை கிடைத்துள்ளது. இதைவைத்தே கிடுக்கப்பிடி விசாரணையும் நடந்துள்ளது. இப்போது வினோத் ஜெயிலில் இருக்கிறார்.