இந்தியர்கள் கைலாசா வர தடை விதித்த நித்தியானந்தா!
21 Apr,2021
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.பாலியல் புகார், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல், அதெற்கென தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். அதுமட்டுமல்லாமல், கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.
கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார்.
கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், 'கொரோனா தொற்று பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.