ஐ.எஸ். அல் - குவைதாவுக்கு தடை விதித்தது இலங்கை
15 Apr,2021
கொழும்பு:இலங்கையில் ஐ.எஸ். அல் - குவைதா உட்பட 11 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் பாகிஸ்தானின் அல் - குவைதா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத அமைப்புகள் முழுமையாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தேசிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பொது அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பு காரணமாக ஐ.எஸ். மற்றும அல் - குவைதா உட்பட 11 பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் நாட்டில் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பது அவர்களுடன் தொடர்பில் இருத்தல் நிதி மற்றும் தளவாட உதவிகள் செய்வது அடைக்கலம் அளிப்பது அவர்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் உள்ளிட்டவை சட்டப்படி குற்ற செயல்களாக கருதப்படும்.
விதிகளை மீறி இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடுவோருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.