பாம்பு போன்ற ‘ப்ளூ டூன்ஸ்’ உருவம்:? நாசா பரபரப்பு தகவல்.!
14 Apr,2021
தி நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்று அழைக்கப்படும் நாசா செவ்வாய் கிரகத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பு உண்மையில் நீலமான நிறத்தில் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. செவ்வாய் கிரகத்தில் எப்படி இப்படி ஒரு நீல நிறம் சூழ்ந்தது என்று சந்தேகிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது, நாசா கூறிய உண்மையை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் மார்ஸ் ஒடிசி ஆர்பிட்டர் (Mars Odyssey) தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில் ஒடிஸி ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீலநிற குன்றுகளைக் காட்டுகிறது மற்றும் கிரகத்தின் துருவப் பகுதிகளுக்கு அருகில் இது காணப்பட்டுள்ளது. குன்றுகளின் தெளிவான மற்றும் உயர்-வரையறை படத்தைப் பெற ஒடிஸி ஆர்பிட்டரால் தெர்மல் எமிஷன் இமேஜிங் சிஸ்டம் (THEMIS) ஐப் பயன்படுத்தி படம் பிடித்துள்ளது.
நம்பமுடியாத விரிவான படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனம் வியாழக்கிழமை ‘ரெட் பிளானட்டில் ப்ளூ டூன்ஸ்’ என்ற தலைப்பில் பகிர்ந்து வெளியிட்டுள்ளது. சிவப்பு நீலம் என்று இரண்டு வகையான வெவ்வேறு நிற குன்றுகள் படத்தில் காணப்படுகின்றது. இதில் வெப்பமான காலநிலையைக் குறிக்கும் வகையில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற குன்றுகள் படத்தில் காணப்படுகிறது. அதேபோல், செவ்வாய் கிரகத்தின் குளிர்ந்த காலநிலையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் அல்லது வெளிர் நிறத்தில் குளம் போன்ற குன்றுகள் படத்தில் காணப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்களின் தளங்களில் இது போன்ற குன்றுகள் பெரும்பாலும் குவிகின்றது. ஆனால், ஏஜென்சியின் கூற்றுப்படி, இந்த குன்றுகள் காற்றினால் ஏற்பட்ட மாபெரும் சுழற்சியினால், இவை முறுக்கேறி பாம்பு உருவத்திலான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு உருவெடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் படம் ஒடிஸி சுற்றுப்பாதையின் 20 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு சிறப்புப் புகைப்படங்களின் ஒரு பகுதியாகும். இது வரலாற்றில் மிக நீண்ட காலமாகச் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு விண்கலமாகும்.
நாசா இதற்கு முன்னர் 2018 இல் நீல செவ்வாய் குன்றுகளின் படங்களை பகிர்ந்து கொண்டது. உண்மையில், நாசா அதன் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில், விண்வெளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை இடுகையிலாவது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விண்வெளியில் இருந்து நீல கிரகம் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதற்கான சில அதிர்ச்சியடையக்கூடிய படங்களை அஹென்சி வெளியிட்டது.