ஆஸ்பத்திரி பாத்ரூமுக்குள் நுழைந்த சரளா
03 Apr,2021
பலவருடம் ஒன்றாக வாழ்ந்த ஆதர்ச தம்பதிகளில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றொருவர் அவரை பிரிந்த துக்கத்தில் மாரடைப்பாலோ, அல்லது தற்கொலை செய்து இறந்துவிடுவதை கேள்விப்பட்டுள்ளோம்.. அதுபோலவே விழுப்புரத்திலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், இவர்களுக்கு கல்யாணம் ஆகி வெறும் 4 மாசம்தான் ஆகிறது..! விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்துள்ளது ஏந்தூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ரமேஷ்.
இவருக்கு கல்யாணம் ஆகி 4 மாசம்தான் ஆகிறது.. இவரது மனைவி பெயர் சரளா. இந்நிலையில் ரமேஷ் 2 நாளைக்கு முன்பு கிளியனூர் பகுதியில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. இளவபட்டு அருகே சென்றபோது, திடீரென பைக்கில் பிரேக் பிடிக்காமல் போய்விட்டது.. விபத்து இதனால் நிலைதடுமாறி, எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதையடுத்து,
இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீசார், இதில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... சிகிச்சை பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ரமேஷ்க்கு மிக தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் நேற்று சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்துவிட்டார். இதையடுத்து, ரமேஷ் இறந்துவிட்டார் என்ற தகவலை டாக்டர்கள் சரளாவிடம் சொன்னார்கள். அலறல் இதை கேட்டு அலறிய சரளா.. அங்கேயே புரண்டு புரண்டு விழுந்து அழுதார்.. ஒருகட்டத்தில் அவரால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல்,
ஆஸ்பத்திரி பாத்ரூமுக்குள் நுழைந்து, தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், யாரும் முன்னதாக யாரும் தடுக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.. பாத்ரூமில் துப்பட்டாவில் தொங்கி கொண்டிருந்ததை அங்கிருந்தோர் எதேச்சையாக பார்த்துள்ளனர்.. பரிதாபம் அதற்கு பிறகு அவரை மீட்டு, அதே ஆஸ்பத்திரியில் வைத்து காப்பாற்ற முயன்றனர்.. ஆனால் அவரையும் காப்பாற்ற முடியவில்லை.. சரளாவின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. கல்யாணம் ஆன 4 மாசத்தில், ஒரே ஆஸ்பத்திரியில் கணவனும் மனைவியும் சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கடித்துவிட்டது.