சூரியனை விட சக்தி வாய்ந்தது..! அதென்ன தெரியுமா..?
21 Mar,2021
''
விண்வெளியை மனிதர்களாகிய நாம் ஆராய்த்தொடங்கிய நாள் முதல் அதன் தூய்மையான அழகு மூலம் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அனுதினமும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். ஜூலை 1 : மொபைல்போன் கட்டணம் உயர்வு.! பதிவு செய்யப்பட்டுள்ள பல அற்புதமான படங்கள், நிகழ்த்தப்பட்டுள்ள எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மூலம் இந்த பரந்த அண்டத்தில் எந்தவொரு நேரத்திலும் நாம் இங்கே தனியாக, பலமானவராக இல்லை என்பதை உணர்ந்துகொண்ட இருக்கிறோம். அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இது..!
ஒரு இளம் நட்சத்திரம் : சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் நட்சத்திரம் நமது விண்மீனில் உலா சூரியனை விட சுமார் 30 மடங்கு பெரிய அளவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒளியாண்டுகள் : அந்த நட்சத்திர பூமியில் இருந்து சுமார் 11,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. 100,000 ஆண்டு : சூரியன் போன்ற நட்சத்திரம் உருவாக ஒரு மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது, மறுபக்கம் இதே போன்ற சராசரி அளவிலான பாரிய நட்சத்திரங்கள் வேகமாக 100,000 ஆண்டுகளில் உருவாகிறது.
ஒட்டுமொத்த ஆயுட்காலம் : நமது சூரியனை போன்றே இந்த நட்சத்திரம் ஆனது தனது சொந்த எரிபொருளை எரித்து ஒரு குறுகிய ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை விளைவிக்கிறது. மிகவும் இளமை : அதாவது அந்த நட்சத்திரங்கள் மிகவும் இளமையானதாக இருப்பதால் இப்போது அதனை அடைவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியமாகும். கெப்லரியன் : அதிக அலை நீளங்கள் கொண்ட தொலைநோக்கிகளின் உதவி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட எம்எம்1 நட்சத்திரம் ஆனது ஒரு கெப்லரியன் வட்டால் சூழப்பட்டுள்ளது. அருகாமை : உடன் அந்த பெரிய வட்டு அதன் நட்சத்த்திரம் அருகாமையில் இருக்க வேகமாகவும், தொலைவில் செல்ல மெதுவாகவும் சுழல்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தத்துவார்த்த கணக்கீடுகளின்படி அந்த வட்டு உண்மையில் இன்னும் தன்னுள் அதிக வெகுஜன வாயு மற்றும் தூசி அடுக்குகளை மறைத்து வைத்திருக்க முடியும். கடினமான செயல்முறை : இதுவரையிலாக, பிரபஞ்சத்தில் பாரிய நட்சத்திரங்கள் எப்படி வளர்கினறன என்ற ஆய்வு ஒரு கடினமான செயல்முறையாகவே இருந்து வருகிறது. எப்படி : இந்த சுவாரஸ்யமான கண்டுபிடிப்பின் மூலம் இவ்வகை பாரிய நட்சத்திரங்கள் உருவாவது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.