சுவிஸ்ஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை!
21 Mar,2021
ஆண்டு பிறந்து 11 வாரங்களே ஆகியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் அதிகமாக வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், குடும்ப வன்முறை அதிகரித்திருக்கலாம் எனவும், அதுவே கொலைகள் அதிகரிக்க காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுவிஸில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 52 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் தமது 44 வயதான துணையை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளதுடன், தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திங்கட்கிழமை 75 வயதான நபர் தமது 77 வயதான மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2020ல் மட்டும் 16 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான 5 கொலை முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2009 முதல் 2018 வரையான காலகட்டத்தில் குடும்ப வன்முறையால் இரண்டு வாரத்திற்கு ஒரு பெண் என கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.