சுவிட்சர்லாந்தில் பெண் மருத்துவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த விவகாரத்தில் இத்தாலிய மருத்துவர் மீதான நீதிமன்ற விசாராணை துவங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் உரிய நேரத்தில் உதவி அளிக்க மறுத்தது, மரணத்திற்கு காரணமானது உள்ளிட்ட பிரிவுகளில் அந்த மருத்துவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெண் மருத்துவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த விவகாரத்தில் இத்தாலிய மருத்துவர் மீதான நீதிமன்ற விசாராணை துவங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் உரிய நேரத்தில் உதவி அளிக்க மறுத்தது, மரணத்திற்கு காரணமானது உள்ளிட்ட பிரிவுகளில் அந்த மருத்துவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இத்தாலிய மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தினசரி 650 பிராங்குகள் அபராதமாக 240 நாட்கள் செலுத்த நேரிடும் எனவும்,
இதுவரையான நீதிமன்ற செலவுகளையும் ஏற்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, முழுமையான தண்டனைத் தீர்ப்பு நீதிமன்றத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆகஸ்டு மாதம் 32 வயதான இந்த இத்தாலிய மருத்துவர் St. Gallen மண்டலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக வந்துள்ளார்.
ஆனால், St. Gallen மண்டலத்தில் குடியிருக்கும் இத்தாலிய பெண் மருத்துவர் ஒருவருடன் இவர் ஆபாச சேட் செய்துள்ளதும்,
அவரை சந்திக்கவே இத்தாலிய மருத்துவர் St. Gallen வந்ததும் பின்னர் தெரிய வந்தது.
குறித்த மருத்துவரின் மொபைலில் இருந்து பெறப்பட்ட தகவலில் 60 குறுந்தகவல்கள் பரிமாறிக்கொண்டது தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இருவரும் அந்தரங்கப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 6ல் இருந்து 7 மணிக்குள் அந்த இத்தாலிய மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு குறித்த இத்தாலிய பெண் மருத்துவர் சென்றுள்ளார்.
தொடர்ந்து இருவரும் பல மணி நேரம் உறவில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் ஆபத்தான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர்.
ஒருகட்டத்தில், நள்ளிரவு தாண்டிய நிலையில், குறித்த பெண் மருத்துவர் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
திகைத்துப் போன மருத்துவர், சுமார் 1.15 மணிக்கு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் மருத்துவமவ உதவியை நாடுவதை அவர் தவிர்த்ததாகவே கூறப்படுகிறது.
பொலிசாரிடம், தாம் ஒரு இத்தாலிய விருந்தாளி எனவும், இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில் அவர் இறந்து விட்டார் என்றே தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிசார் அவரது குடியிருப்புக்கு வந்து சேரும் முன்னர், தமது படுக்கை அறையில் பாதுகாத்திருந்த ஆபாச பொம்மைகளை அவர் அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.