உங்களால் மூட்டு வலியை தாங்க முடியவில்லையா.?”
28 Feb,2021
ஆர்த்ரைட்டிஸ் என்ற நோயை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அப்படி என்றால் என்ன? அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இன்றைய நவீன நாகரீக கால கட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். இளைஞர்களுக்கும் கூட அடிக்கடி கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்வார்கள். முதிர்வு காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது இளைஞர்கள் குழந்தைகள் என்று சிறு வயதினருக்கும் வருகின்றது.
இணைப்புகள், மூட்டுகளில் வலி வீக்கம், இருக்கமான உணர்வு ஆகியவற்றை ஆர்த்ரைட்டிஸ்ன் அறிகுறிகளாக நாம் கூறுகிறோம். இந்த வழி சிலருக்கு அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும்.
குறிப்பிட்ட இடைவெளியில் வந்துபோகும். இதை கவனிக்காமல் விட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு நாம் எக்ஸ்-ரே எடுத்து பார்த்து ரத்தப் பரிசோதனை எடுத்து அதற்கான தீர்வை காண வேண்டும்.
இதுதவிர குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். பிசியோதெரபி ஓய்வு, ஐஸ்கட்டி மற்றும் வெந்நீர் ஒத்தடம் போன்றவற்றை தொடர்ச்சியாக நாம் செய்யும் போது இந்தப் பிரச்சினைகள் சரியாகும் என்று கூறுகின்றனர். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் போன்றவை மற்றும் நமது ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனைக்கு தீர்வாகாது.
நாம் உண்ணும் உணவும் அதற்கு தீர்வாக அமையும். நாம் மீன், ஃபிளாக்ஸ் விதைகள், ஆளி விதைகள், வால்நட், முட்டையின் மஞ்சள் கரு, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர் போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். சர்க்கரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்