சிறைக்கு அனுப்பிய, கவிதை!
24 Apr,2020
கடந்த, 18 மாதங்களாக, உகாண்டா நாட்டு சிறையில் இருக்கிறார், டாக்டர் ஸ்டெல்லா நான்சி. கவிஞர், சமூகசேவகி மற்றும் எழுத்தாளர் என, பல திறமைகள் உள்ள இவர், ஏன் சிறையில் இருக்கிறார்?
இவர் எழுதிய கவிதை தான், இவரை சிறைக்கு அனுப்பியது. ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்களை பற்றி கவிதை எழுதியது தான், இவர் செய்த குற்றம்.
சமீபத்தில், இவருக்கு, 'ஆக்ஸ்பாம்நோவிப் பென் இன்டர்நேஷனல்' விருது வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியேறினாலும், 'மக்களுக்காக ஆரம்பித்த போராட்டம் தொடரும்...' என்கிறார்.