மாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு!
21 Dec,2019
மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.
82 அடி நீளமுள்ள இப்பகுதி 22 அடி உயர வளைவுகள், அதன் சுவர்களின் வடிவமைப்பு, கட்டிட கலை, பியூக் சகாப்தத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே சுண்ணாம்புக் கல்லை நேர்த்தியாக செதுக்கி, வலுவாக அமைக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.
இதன் மூலம் பண்டைய மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி கண்டிபிடிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.