ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டி!
05 Dec,2019
பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்கக்கட்டி ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
121.3 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரில் சுழியோடும் கருவியைப் பயன்படுத்தி புதையல் வேட்டைக்காரர் ஒருவர் இந்தத் தங்கத் துண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு துண்டுகளும் மிகவும் தூய்மையாக இருந்தன என்றும் அவை 22 கரட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு துண்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து தி ரீயூனியன் நக்கற் (The Reunion Nugget) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
500 ஆண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியைவிட இது பெரியது என்று கூறப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்து ஆற்றில்கண்டெடுக்கப்பட்ட 85.7 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டியே இவ்வளவு காலமும் பெரியதாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.