டாய்ம்லர் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்!
30 Nov,2019
மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவெடுத்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.