நித்தியானந்தாவின் புதிய வீடியோ பதிவு
24 Nov,2019
தமிழகத்தில் பிரச்சினையை மடை மாற்றுவதற்கு தான் குறிவைக்கப்படுவதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேசும் தமிழை புரிந்து கொள்ளாமல் தன்மீது வழக்குப் போடப்படுவதாக அவர் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் பொலிஸார் என்மீது வழக்குப் பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள்” என அந்த காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் பொலிஸில் நித்தியானந்தா மீது முறைப்பாட அளித்த நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரியநந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது.
தற்போது அவர் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் 2 குட்டித் தீவுகளை உள்ளடக்கிய பிரினிடாட் அன்ட் டொபோகோ என்னும் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை வந்தாலும் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைபற்றி எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துவந்த நித்தியானந்தா தற்போது தன்மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தவுடன் அவர்களைக் கண்டித்து பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது