திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..!
11 Nov,2019
திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..!
இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகனாவார். வசதியாக வாழ்ந்து வந்த இவர் ஒரு மென்பொறியியலாளராவார்.
இந்நிலையில், சொந்தக்கார பெண்ணுடன் இவருக்கு கடந்தமாதம் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில், நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை அறைக்கு சென்று ஆயத்தமாகிகொண்டு வருகிறேன் என்று சென்றவர், அவர் அறையை விட்டுவெளியே வரவே இல்லைஸ
தாலி கட்ட அரை மணி நேரம்தான் இருப்பதால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்கவே இல்லை.. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அப்போது, சந்திப் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை கண்டு உறவினர்கள் கதறி துடித்தனர். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்படவே, அவர்களும் விரைந்து வந்து விசாரணையை நடத்தினர். அப்போது, சந்திப்பின் அம்மா ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாத்தா , பாட்டிதான் சந்திப்பை வளர்த்து வந்துள்ளனர்.
இதில், தாத்தா கொஞ்ச நாளைக்கு முன்பு இறந்துவிட்டார். தாத்தா இறந்ததில் இருந்து சந்திப் சோகமாகவும், கடுமையான மன உளைச்சலிலும் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அதனால் தாத்தா பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் இப்படி தற்கொலை முடிவுக்கு வந்தாரா அல்லது வேறு யாருடனாவது காதல் வசப்பட்டு இருந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சந்திப்பின் உடலை கண்டு திருமணப்பெண் கதறி அழுதது குடும்பத்தாரை நிலைகுலைய செய்துவிட்டது. தாலி கட்ட அரை மணி நேரமே இருந்த நிலையில் மணமகன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.