பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்
07 Nov,2019
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பார்வையற்ற மாணவியை இரண்டு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குஜராத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் இரண்டு மாத காலத்திற்குள் பார்வையற்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளான 62 மற்றும் 30 வயதான இரு ஆசிரியர்களே இவ்வாறு 15 வயதுடைய மாணவியை பாடசாலையின் சங்கீத அறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர்.
தீபாவளி விடுமுறைக்காக பாடசாலையில் இருந்து வீடுதிரும்பிய போதே மாணவியின் குடும்பத்தாருக்கு நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
மாணவி தனக்கு இரண்டு ஆசிரியர்களால் நேர்ந்த கொடுமைகளை அவளின் மாமியிடம் கூறியுள்ளார். பின்னர் மாமி பொலிசாரை தொடர்பு கொண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.
மாணவி இரண்டு மாதங்களுக்கு முன்பு 30 வயதான ஆசிரியர் ஒருவரினால் சங்கீத அறையில் முதன்முதலில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மாமியாரிடம் கூறினார்.
62 வயதான மற்றைய ஆசிரியர் மூன்று நாட்களுக்குப் பிறகு அதே அறையில் வைத்து குறித்த மாணவியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சிறுமி ஜூலை மாதம் விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் சங்கீதம் கற்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த இரு ஆசிரியர்களும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியுள்ள அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.