பயணப் பைகளுக்குக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க பெண் செய்த வினோத செயல்!
05 Nov,2019
பயணப் பைகளின் எடை, வரம்புக்குமேல் கூடினால் பிரச்சினைதான். கூடுதல் எடைக்குக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க பல நூதன வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர் பயணிகள். அவர்களில் ஒருவர் பயணத்துறை நிருபர் ரிபெக்கா அண்ட்ரூஸ் (Rebecca Andrews).
கூடுதல் எடையால் பயணப்பெட்டியில் வைக்கமுடியாத பொருள்களைத் தம் சட்டைக்குள் திணித்து, கர்ப்பிணியைப் போல வேடமிட்டார் அவர்.
சிறிய உடல்வாகு கொண்ட அவர், பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அதுவே ஆக நம்பகமான முறை என்றார்.
ஆனால் 60 டாலரைச் சேமிக்க அவ்வாறு செய்ததை எண்ணி வருந்துவதாக அவர் கூறினார்.
முதுகுப் பக்கத்தில் தமது மடிகணினியை வைத்து, வயிற்றுப் பகுதியில் துணிகளை உருண்டையாக வைத்திருந்தார்.
தாம் வெற்றிகரமாக மற்றவர்களை ஏமாற்றியதாக நம்பிய வேளையில் விமானச் சிப்பந்தி அவரின் முதுகிலிருந்த மடிகணினியைப் பார்த்தார்.
இறுதியாகக் கூடுதல் எடைக்கு 60 டாலரைச் செலுத்தி பயணம் செய்தார் அண்ட்ரூஸ்.
சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.